புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 19, 2021)

கடின இருதயம் வேண்டாம்

எபிரெயர் 3:8

உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.


பேதுரு என்னும் சீஷன் ஆண்டவர் இயேசுவால் மிகவும் கடுமையாக கடிந்து கொள்ளப்பட்டவன். அதுமட்டுமல்லால், தன் ஆண்டவரை தன க்குத் தெரியாது என்று, பலர் முன்னிலையிலே, இயேசுவை மறுதலித்த வன். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன் மனதை கடினப்படுத்திக் கொள்ளாமல் இயேசுவை அண்டிக் கொண்டான். நான் உம்மைவிட்டு எங்கே போவேன் என்று அறிக்கையி ட்டான். தன் குற்றங்களுக்காக மனங்; கசந்து அழுதான். நியாயதிபதிகள் இஸ்ரவேலிலே இருந்த நாட்களிலே, சவுல் என்னும் ஒரு மனிதனை, தேவன் பிரித்தெடுத்து, அவனை இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். அவன் கர்த்தரை அறிந்திருந்தும், தான் குற்றங்கள் செய்யும் போது, அதை ஏற்றுக் கொள்ள மனதில்லாமல் தன் செய்கைகளை நியாயப் படுத்தினான். கர்த்தராகிய இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, தாங்கள் கர்த்தரை அறிந்தவர்கள் என்று கூறிய மதத்தலைவர்கள், இயேசு அவர்கள் குற்றங்களை குறித்து பேசும்போது, கடுங் கோபங்கொண்டு, தங்கள் மனதை கடினப்படுத்திக் கொண்டு, கர்த்தரை குற்றம் சாட்டினார்கள். இவர்களில் கர்த்தர் யார்மேல் பிரியமாக இருந்தார்? தன்னுடைய சீஷனாகிய பேதுருவின் மேலே அவர் பிரியமாக இருந்தார். மேற்கூறிய மூன்று சம்பவங்களிலும் தங்கள் குணாதிசயங்களை வெளிக்காட்டிய மனிதர்கள் தேவனைக் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். இன்றும் தேவனை அறிந்திருக்கின்றோம் என்று கூறும் மனிதர்களும் மேற்கூறிய மனிதர் களைப் போலவே இருக்கின்றார்கள். தங்களைப் குறித்ததான, தேவ னாகிய கர்த்தருடைய கண்டிப்பின் வார்த்தைகளை கேட்கும் போது சிலர் பேதுருவைப் போல மனம் திரும்பி இயேசுவை இன்னும் அதிக மாக அண்டிக் கொள்கின்றார்கள், வேறு சிலர், மனதைக் கடினப்படுத்தி னவர்களாக சவுல் ராஜாவைப் போல தங்கள் நிலையை நியாயப்ப டுத்துகின்றார்கள். இன்னும் சிலர் அன்றிருந்த மதத்தலைவர்களைப் போல, தேவ வார்த்தைகளை எடுத்துக் கூறுபவர்களின் மேல் கடும் கோபம் கொண்டு, தேவனை அறியாதவர்கள்கூட செய்யாத அநியாய ங்கைள செய்து விடுகின்றார்கள். பிரியமானவர்களே, கர்த்தருடைய வார்த்தையானது பேசப்படும் போது, அதன்படி உங்கள் வாழ்வில் சில காரியங்கள் மாற்றப்பட வேண்டும் என்றால், பேசுகின்றவர்மேல் கோபம் கொள்ளாமல், கர்த்தருடைய வார்த்தையின்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள உங்களை அவரிடம் ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி குணமாக்குவேன் என்ற தேவனே, உம்முடைய வார்த்தையை நான் கேட்கும்போது நான் இறுமாப்படை யாமல், பேதுருவைப் போல உம்மைப் பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:18

Category Tags: