புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 18, 2021)

கிருபையின் நாட்கள்

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.


ஒரு வயலின் சொந்தக்காரன் தன் வயலிலே வேலை செய்யும்படிக்கு அந்த ஊரிலுள்ள மனிதர்களை தெரிந்தெடுத்தான். அவர்கள் யாவரும் கடுமையாக உழைத்து தங்கள் வேலைகளை செய்து முடித்தார்கள். வயலின் சொந்தக்காரனானவன், முன்குறித்த கூலியை அவர்கள் யாவ ருக்கும் கொடுத்து அனுப்பினான். அவர்களில் சிலர் கிடைத்த கூலியை எடுத்து தங்கள்; தேவைகளுக்காக பயன்படுத்தினார்கள். வேறு சிலர், தங்கள் ஆசைகளையும் களியாட்டங் களையும் நிறைவேற்றுவதற்காக பய ன்படுத்தினார்கள். இன்னும் சிலர், வாழ் வில் பல தேவைகள் இருந்த போதும், ஒரு சிறிய பங்கை தேவனுக்கும், இன்னுமொரு சிறிய பங்கை ஏழைக ளுக்கும் பிரித்து வைத்துவிட்டு, மிகு தியானவைகளை தங்கள் அனுதின தேவைகளை சந்திப்பதற்கு பயன்ப டுத்தினார்கள். இவர்களில்; யார் உங்கள் மனத்திற்கு பிரியமாக இருக் கின்றார்கள்;? யார் தேவனுடைய பார்வையிலே பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள்? யார் பரலோகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைக் கின்றார்கள்? இந்த சம்பவத்தை மையமாக வைத்து இரண்டு காரியங் களை சிந்தித்துப் பாருங்கள். 1. தேவனாகிய கர்த்தர்தாமே, ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு இந்த உலகிலே யாவர்மேலும் கிருபையை பொழிகின்றார். அதை பெற்றுக் கொள்ளும் மனிதன், தான் உயிரோடிருக்கும் நாட்களிலே அதை எப்படி பயன் படுத்துகின்றான் என்பதை அவனவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 2. இந்த உலகிலே, உங்கள் மத்தியிலே வாழும் மனிதர்கள் தாம் பெற் றிருக்கும் கிருபையை, தங்கள் விருப்பப்படி செலவு செய்யலாம். அத னால் நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் கண்களை அவர்கள் நடக்கையின்மேல் பதிய வைக்காமல் ஆண்டவராகிய இயேசுவின் மேல் பதிய வைத்து அவர் காட்டிய வழியிலே வாழுங்கள். “என் சித்தத்தின் படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.” என்று நம் ஆண்டவராகிய இயேசு கூறி னார். அநியாயங்களும் அநீதிகளும் நிறைந்த உலகிலே ஆண்டவராகிய இயேசு பல நிந்தைகள், போராட்டங்கள், பாடுகள் மத்தியிலும், மற்ற வர்களைப் போல வாழாமல், மற்றவர்கள் மீட்படைய வேண்டும் என்ற மனதுடன், தன்னை தியாகமாக ஒப்புக்கொடுத்தார். அதுபோலலே நாமும், நம்முடைய வாழ்வில் தேவனுக்கு பிரியமானவைகளை செய்வோம்.

ஜெபம்:

கிருபையை பொழியும் தேவனே, நீர் எனக்கு தந்திருக்கும் கொஞ்சத்திலே நான் உண்மையுள்ளவனாக இருந்து, உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:19-20