புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 17, 2021)

இருதயமாகிய நல்ல பொக்கிஷம்

லூக்கா 6:45

நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்


தீண்டுகின்ற ஒரு சர்ப்பமானது எந்த மனு~னைக் கண்டாலும் விதிவில க்கின்றி தீண்டும். இது அதன் இயற்கை சுபாவம். நிழல் கொடுக்கும் மரமானது அதன் கீழ் ஒதுங்கும் யாவருக்கும் நிழல் கொடுக்கும். நீ அரசன் என் நிழலில் வரலாம், நீ ஏழை என் நிழலில் ஒதுங்க முடியாது, உயர்ந்தவன், தாழ்ந்தவன், கெட்டவன், நல்லவன் என்று அது எந்த வேற்றுமையையும் காண்பிப்பதில்லை. அதன் நிழலிலே ஒதுங்கும் யாவருக் கும் அது ஆறுதலாக இருக்கும். நல்ல ஊற்றிலிருந்து வரும் தண்ணீர் அதை பருகும் யாவருக்கும் தாகத்தை தீர்க் கும். ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித் திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திரா ட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. இயேசு சொன் னார்: வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கி றவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். அப்படியானால், ஒருவனுடைய உள்ளத்திலிருந்து தித்தி ப்பும் கசப்பும் புறப்படுமாக இருந்தால், அவன் இருதயத்திலே இருப்பது என்ன? அங்கே திவ்விய சுபாவத்தின் ஒரே ஊற்றுகண் மட்டுமல்ல, அங்கே வேறு ஊற்றுக்கண்களும் உண்டு. பிரியமானவர்களே, நன்மை செய்வதிலே சோர்ந்து போகாதிருங்கள். சில மனிதர்கள் ஏழைகளைப் போல வே~ம் பூண்டு, மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொள்கின்றார்கள். அது அவர்களுடைய ஏமாற்றும் சுபாவம். ஆனால், ஏழைகள் யாவரும் ஏமாற்றுகின்றவர்கள் என நினைத்து நாம் தான தர்மங்களை விட்டுவிட்டால், நம்முடைய திவ்விய சுபாவமும் தணிந்து போய்விடும். சிலர் உங்கள் வாழ்க்கையிலே துரோகம் செய்துவிட்டா ர்கள் என்று உங்கள் மன்னிக்கும் சுபாவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது தேவ வார்த்தையின்படி சரியாகுமோ? உங்கள் பிதாவாகிய தேவன் இரக்கத்தில் செல்வந்தவராக இருக்கும் போது, நீங்கள் இரக்க த்திலே கஞ்சத்தனமுள்ளவர்களாக இருப்பது எப்படி? நல்ல மனு~ன் தன் இருதயமாகிய நல்ல பொக்கி~த்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனு~ன் தன் இருதயமாகிய பொல்லாத பொக் கி~த்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்;. பிரியமானவர் களே, நீங்கள் வானம் பூமி படைத்த பிதாவாகிய தேவனுடைய பிள்ளை கள் என்பதை ஒருபோதும் மறந்து விடாதிருங்கள்.

ஜெபம்:

பூரண சற்குணராயிருக்கின்ற பரலோக பிதாவே, திவ்விய சுபாவத்திற்கு பங்காளியாக என்னை அழைத்தவரே, எந்த சூழ்நிலையிலும் நான் அதை வெளிக்காட்டும்படிக்கு எனக்கு பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 7:38