புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 16, 2021)

தாழ்மையும் கீழ்ப்படிவும்

லூக்கா 14:34

உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?


ஒரு வீட்டின் சொந்தக்காரன் தன் வீட்டிற்கு முன்பாக அழகான ஒரு பூந்தோட்டத்தை வைத்திருந்தான். அவ்வழியாய் போய் வருபவர்கள் அந்தப் பூந்தோட்டத்தை பார்த்து அதன் அழகை இரசிப்பார்கள். சிலர் வீட்டுச் சொந்தக் காரனின் அனுமதியோடு மலர்களை பறித்துச் சென்றா ர்கள். தனக்கு பிரியமானவர்களு க்கு அவன் அவைகளை கொடுத் தான். ஆனால் சில நாட்களுக்கு பின்பு, அத்தோட்டத்திலிருந்த மல ர்களை சிலர் அனுமதியின்றி பறி த்துக் கொண்டு செல்வதை அவன் அவதானித்தான். அது அந்த வீட் டுச் சொந்தக்காரனுக்கு விசனமாக இருந்தது. அப்படிப்பட்டவர்களிடமி ருந்து தன் தோட்டத்தின் மலர்களை பாதுகாக்க பல வழிமுறைகளை செய்தும் பலனளிக்கவில்லை. அதனால் அவன் “உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை” என்று தன் வீட்டிற்கு முன் இருந்த தோட்டத்தை அகற்றிவிட்டு, யாரும் உட்புகாதபடிக்கு முள்வேலியால் இடத்தை அடைத்துப் போட்டான். ஒரு சில மனிதர்களின் பிரியமற்ற செயல்களால் அவன் தன் வீட்டின் அழகை கெடுத்துவிட்டான். இது போலவே, நம் இருதயமாகிய தோட்டத்திலே, திவ்விய சுபாவங்கள் அழகான மலர் களை போல இருக்கின்றது. சிலர் தமக்கு வேண்டியவர்களுக்கு பிரியத் துடன் பிரியமானதை வெளிப்படுத்துகின்றார்கள். தமக்கு இ~;டமான வர்களுக்கு நற்கிரியைகளை தாராளமாக செய்து வருவார்கள். ஆனால், தற்போது தம்மை சூழவுள்ள வஞ்சனையுள்ள மனிதர்கள் இவர்களின் நற்கிரியைகளை தகாதவிதமாக பயன்படுத்திக் கொள்வதால், விசனம டைந்து விடுகின்றார்கள். அதை தடுத்து நிறுத்து வதற்கு பல வழிமு றைகளையும், சட்டதிட்டங்களையும் போட்டுக் கொள்கின்றார்கள். அவை பலனளிக்காதவிடத்து, தங்களிலிருந்து திவ்விய சுபாவங்களை அப்ப டியே விட்டுவிட்டு, யாரும் தங்களிடம் நெருங்கி தயவு கேட்காதபடிக்கு முள்வேலிகள் போன்ற சுபாவங்களை வெளிக்காட்டும்படி முயல்கின் றார்கள். பிரியமானவர்களிளே, சில மனிதர்களின் இப்படிப்பட்ட வஞ்சக மான செயல்களினால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதை மற ந்து போய்விடாதிருங்கள். இந்த உலகிலே, மனிதர்கள் தேவ கிரு பையை அசட்டை செய்கின்றார்கள். அதனால் தேவன் தம் கிருபையை பொழிவதை நிறுத்திவிடவில்லை. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கின்றீ ர்கள். உப்பு அதன் சாரத்தை இழந்து போனால் அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, இந்த உலகிலே எங்களை சூழ உள்ள மனிதர்களின் தவறான நடக்கைகளால் நான் என் பரிசுத்தத்தின் அலங் காரத்தை குலைத்துப் போடாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:48