புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 15, 2021)

சத்திய ஆவியானவர் வழிநடத்துவார்

யோவான் 16:13

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;


“தேவ சாயலாக மாறி தேவனோடிருப்பேன்” என்று ஒரு அழகான பாடலின் வரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆதியிலே தேவனானவர், தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாய லாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித் தார். ஆனால் மனிதனோ, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் தேவ சாயலை இழந்து போனான். தேவ சாயலை இழந்து போவதற்கு அவன் தன் மாம்சத்தின் இச்சைக்கு இடங்கொடுத்தான். இழந்து போன அந்த தேவ சாயலை மறுபடியும் பெற்றுக் கொள்ளாமல் நாம் தேவனோடு பரலோகிலே வாழ முடி யாது. அந்த தேவசாயலை அடை ந்து கொள்ளும்படிக்கு, ஆண்ட வராகிய இயேசு வழியைத் திறந்தார். அந்த வழியாக பிரவேசித்து, ஆன்மீக இரட்சிப்பை பெற்றுக் கொண்டு, அவருடைய சித்தம் செய்பவ ர்கள் தேவ சாயலிலே தினமும் வளர்ந்து வருகின்றார்கள். தேவ வார்த் தைக்கு கீழ்ப்படியாமல் இழந்த தேவசாயலை, நாம் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிவதினால் மறுபடியும் பெற்றுக் கொள்ளலாம். தேவ சாயலை இழந்து போகும் மனிதர்கள் இந்த உலகத்தின் மாம்ச இச்சைக்கு அடிமைகளாக இருக்கின்றார்கள். அவர்களுடைய மனதிலே, பகை, வன்மம், கசப்பு, பிரிவினைகள், சண்டைகள், மார்க்கபேதங்கள், மோக இச்சைகள், களவு, பொய், பொருளாசை, தகாத வார்த்தைகள், களியாட்டங்கள், வெறி கொள்ளுதல் போன்ற மாம்சத்தின் சுபாவங்கள் இரு க்கும். அவைகளை தன் இருதயத்திலே வைத்திருக்கும் மனிதன் தேவ சாயலிலே ஒருநாளும் வளரமுடியாது. தேவ சாயலை அடைய விரும் புகின்றவன், இவைகளை விட்டுவிட ஆயத்தமுள்ளவனாக இருக்க வேண் டும். நீங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க உங்களுக்கு தீமை செய்த வர்;கள் உங்கள் வாழ்விலே இருப்பார்கள். அவர்களை குறித்த உங் கள் மனநிலை எப்படியாக இருக்கின்றது. அவர்களை குறித்த கசப்பு உங்கள் மனதில் இருக்கின்றதா? உங்களுக்கு தீமை செய்தவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்காக ஜெபிக்கும் மனநிலை உங்களிடம் உண்டா? மனித பெலத்தால் இவைகளை செய்ய முடியாது. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அவருடைய துணையோடு தேவ சாயலிலே தினமும் வளருங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, தேவ சாயலிலே நான் அனுதினமும் வளர்ந்து பெருகும்படிக்கு, மாம்சத்தின் கிரியைகள் என்னை மேற்கொள் ளாதபடிக்கு, எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16