புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 14, 2021)

தேவனால் எல்லாம் கூடும்

மாற்கு 10:27

மனுஷரால் இது கூடாதது தான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.


ஒரு சமயம் ஒருவன் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவ னைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பா யாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திரு க்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டி ருக்கிறேன் என்றான். இயேசு அவ னைப் பார்த்து, அவனிடத்தில் அன் புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டா னவைகளையெல்லாம் விற்று, தரித் திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தப டியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். பாருங்கள், நித்திய ஜீவனை பெற வேண்டும் என்ற ஆசை அவனிடத்திலிருந்தது. ஆனால், அவனிடமிருந்த ஜசுவரியத்தின் ஆசை நித்திய ஜீவனைவிட மிக அதிகமாக இருந்ததால் அவன் ஆசை அவனை மேற்கொண்டது. ஆண்டவராகிய இயேசுவை சந்தித்த எல்லா ஐசுவரியவான்களையும் பார்த்து அவர் உனக்கு உண்டானவைகளை யெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு என்று கூறவில்லை. ஆனால் இந்த மனிதனுக்கு அது இடறலாக இருப்பதை அவர் அறிந்து கொண் டார். ஒருவேளை விபசாரம், கொலை, களவு, பொய்சாட்சி, வஞ்சனை உங்கள் வாழ்வில் இல்லாதிருக்கலாம். நீங்கள் உங்கள் தாய் தந்தை யரை கனம்பண்ணி அவர்களுக்கு செய்ய வேண்டியவைகளை செய்து வரலாம். ஆனால், உங்கள் மனதை மேற்கொண்டிருக்கும் ஆசை என்ன? நித்திய ஜீவனே உங்கள் மேலான ஆசையாக இருக்க வேண் டும். அப்படியானால் யார்தான் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வான் என்று அன்று இயேசுவின் சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மனித பெலனத்தினால் அது ஆகாது ஆனால் தேவனுடைய பெலத்தினால் அது ஆகும் என்று இயேசு அவர்களை உற்சாகப்படுத்தினார். எனவே தேவ ஆவியின் பெலத்தோடு முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

நித்திய ஜீவனை தருவேன் என்ற தேவனே, என்னுடைய பெலத்தினால் ஒன்றும் ஆகாது, என் பெலவீனங்களை நான் மேற்கொள்ளும்படி தேவ பெலனத்தினால் என்னை நீர் வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:13