புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 13, 2021)

ஜீவனை காத்துக் கொள்ளுங்கள்

லூக்கா 9:24

தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.


ஒரு மனிதனானவன், தன் குடும்பத்தின் வறுமை எப்போது மாறும்? செழிப்பான வருடங்களைக் காண வேண்டும் என்று அனுதினமும் தேவ னிடம் வேண்டிக் கொண்டான். கடுமையாக உழைத்தான், தன் பிள்ளை கள் கல்வி கற்கும்படி தன்னால் முடிந்தளவு பிரயாசப்பட்டு அவர்களை ஊக்குவித்தான். ஆண்டுகள் கடந்து சென்றதும், அவன் செய்யும் தொழி லிலே விருத்தி ஏற்பட்டது. அவன் எதிர்பார்த்திருந்த செழிப்பின் வருட ங்களை கண்டு கொண்டான். க~;ட ங்கள் உருகும் பனிபோல மறைந்து போயிற்று. தேவன் என் வேண்டு தலைக் கேட்டு என்னை ஆசீர்வதித் திருக்கின்றார் என்று பெரும் மகிழ்ச்சி அடைந்தான். நாட்கள் கடந்து செல் லும் போது, அவன் தன்னை அறியா மலே, தனக்குண்டான செழிப்பை தான் இறுகப்பற்றியிருப்பதை அறியாது இருந்தான். சில மாதங்களுக்கு ஞாயிற்று கிழமைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டயாமும் அவனுக்கு ஏற்பட்டது. இலையென்று மறுத்தால் வேலை போய்விடும். வேலை போனால் என் வாழ்வின் செழிப்பு போய்விடுமே என்று ஞாயிறு ஆராதனையை பொருட்படுத்தாது. வேலைக்கு செல்ல இணக்கம் தெரிவித்தான். வேதத்திலே காணும் பரிசுத்தவான்கள் தங்கள் ஆன்மீக இரட்சிப்பை காத்துக் கொள்ளும்படியாக தங்கள் உயிரையே அற்பமாக எண்ணி, எந்த தயக்கமுமின்றி உபத்திரவங் களையும், பாடுகளையும், இழப்புக்களையும் சகித்துக் கொண்டார்கள். ஆனால், இந்த மனிதனோ, தன் வேலையை காத்துக் கொள்ளும்படி தேவனுடைய காரியங்களைவிட்டுவிட ஆயத்தமுள்ளவனாக இருந்தான். பிரியமானவர்களே, வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் என்று மனிதர்கள் அழகாக பாடுகின்றார்கள். ஆனால் அதே மனிதர்களே உயிர்வாழ எனக்கு இந்த உலக செல்வம் தேவை என்று நித்திய ஜீவனை இழந்து போக ஆயத்த முள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். நித்தியமானவைகளை பெற்றுக் கொள்ள விரும்பினால், அநித்தியமானவைகளை இழந்து போவதற்கு நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் தேவைகளை நம் முடைய ஆத்தும நேசர் அறிவார் என்று அவரையே நாம் பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்ல தேவனே, உலக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமல்ல, உமக்காக அவைகளை இழந்து போகவும் நான் ஆயத்தமுள்ளவனாக இருக்க பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஆபகூக் 3:17-18