புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2021)

ஆத்துமாவிற்கு இலாபம் என்ன?

மாற்கு 8:36

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?


ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும் ஒருவன் தன் வியாபாரத்திற்கு நஷ்டம் விளைவிக்கக்கூடிய காரணிகளை கண்டு கொண்டால் அவன் அதை விட்டுவிடுகின்றான். இந்த உலகிலே பொதுவாக மனிதர்கள் தாங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் இலாபத்தை அடையும்படி உழைக்கின்றார்கள். ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கும் மனிதன் தனக்கு அதிக வாடிக்கையாளர்கள் வேண் டும் என்று பிரயாசப்படுகின்றான். விளையாட்டுப் போட்டிகளை நடத் துபவர்கள் பார்வையாளர்கள் வேண்டும் என்று அதற்குரிய நடவ டிக்கைகளை எடுக்கின்றார்கள். அதுபோலவே, சபைகளிலே ஆத் துமாக்கள் பெருக வேண்டும் என் பதும் நம் எல்லோருடைய வாஞ் சையுமாக இருக்கின்றது. எடுத்து க்காட்டாக, ஒரு மனிதன் கையிட்டு செய்யும் தொழில் பெரிதாக விருத்தியடைந்து, அவனுக்கு பெரும் ஆதாயத்தை கொடுக்கின்றது. அவன் செல்லும் சபை ஐக்கியத்திலே ஜனங்கள் பெருகி, சபையானது வளர்ந்து தன்னிறைவு அடைந்திருக்கின்றது. இந்த உலகிலே அவன் தேவைகள் யாவும் சந்திக்கப்பட்டு வருகின்றது. அவனை காணும் மனிதர்கள் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று கூறுகின்றார்கள். பூவு லகிலே ஒருவனுடைய வாழ்வு அப்படியிருப்பதால், அதனால் அவனு டைய ஆத்துமாவுக்கு இலாபம் என்ன? வளர்ந்து பெருகியிருக்கும் சபையில் அவன் அங்கத்தவனாக இருப்பதால், அவன் பரலோகம் சென்றுவிடக் கூடுமோ? இந்த உலகிலுள்ள மனிதர்கள் ஒருவனைப் பார் த்து ஆசீர்வதிக்கப்பட்டவன் நீ என்று கூறுவதால், அவன் தேவனுக்கு பிரியமுள்ளவனாக இருக்க முடியுமோ? ஒரு மனிதன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி, தனக்கு ஐசுவரியத்தையும், அந்தஸ் தையும், நற்பெயரையும் சேர்த்துக் கொண்டாலும், அவன் தேவனுடைய சித்தத்தை தன் வாழ்வில் நிறைவேற்றாதவனாக இருந்தால், அவன் தன் ஆத்துமாவுக்கு நஷ்டம் விளைவிக்கின்றவனாகவே இருப்பான். பிரியமா னவர்களே, சற்று உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள். ஒருவ னுடைய ஆத்துமாவிற்கு இலாபம் உண்டாக வேண்டுமென்றால், அவன் ஐசுவரியவானாக இருந்தாலும், வறியவனாக இருந்தாலும், அவன் தேவனுக்குப் பயந்து, உத்தம வழியிலே நடந்து, தேவ சித்தத்தை தன் சொந்த வாழ்விலே நிறைவேற்றுகின்றவனாக வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகத்தினாலே உண்டாகும் பெயரும் புகழையும் நாடாமல், தேவ பயத்துடன், உத்தமமாக நடந்து, உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:9-11