புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 11, 2021)

குறைகளிலே தரித்து நிற்காதிருங்கள்

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


ஒரு மாணவனானவனின் பாடசாலை முன்னேற்ற அறிக்கையிலிருந்த குறிப்பின்படி அவன் பெற்றோர்கள் வகுப்பாசிரியரை சந்திக்கும்படி சென் றிருந்தார்கள். அந்த மாணவன், பல பாடங்களிலே நல்ல புள்ளிகளை எடுத்திருந்த போதும் தாய் மொழியாகிய தமிழ்ப் பாடத்தில் மிகவும் குறைந்த புள்ளியையே அவன் பெற்றிருந்தான். வகுப்பாசிரியர் பெற் றோரை நோக்கி: அநேக பாடங்களிலே உங்கள் மகனானவன் சிறந்த புள்ளிகளை எடுத்திருக்கின்றான். எனது பாராட்டுளைத் தெரிவிக்கி ன்றேன். அவன் ஏனைய பாடங்க ளில் சிறந்து விளங்கினாலும், இந்த நாட்டின் கல்வி அமைச்சின் சட்டப்படி, தாய் மொழியில் சித்தி பெறாமல், மேற்படிப்பிற்கு செல்ல முடியாது. எனவே, தமிழ்ப் பாடத் தில் அதிக கரிசணை எடுக்கும் படி அறிவுரை கூறினார். ஒரு வேளை அந்தப் பெற்றோர், வகுப்பு ஆசிரியர் எங்கள் மகனின் குறை வைத் தான் நோக்கிப் பார்க்கின்றார் எனவே வேறு ஆசிரியரிடம் தங்கள் மகனை கொண்டு செல்லலாம் அல்லது படிக்கும் பாடசாலையை மாற்றி விடலாம் என எண்ணம் கொள்ளலாம். ஆனால் அவர்கள் எங்கு சென் றாலும், அவர்களுடைய மகன் மேற்படிப்பிற்கு தகுதி பெறும் பொருட்டு தமிழ்ப் பாடத்தில் சித்தி பெற்றே ஆக வேண்டும். பிரியமானவர்களே, இந்த சம்பவத்திலே குறிப்பிட்ட பிரகாரமாக, இன்று சபைகளிலே சிலர் தாங்கள் முன்னேற வேண்டிய இடங்களை காண்பிக்கும் ஊழியர்க ளையும், உடன் சகோதரர்களையும் எதிர்த்து நிற்கின்றார்கள். “என்னைக் குறித்த நல்லவைகளை மட்டும் பேசுங்கள் மற்றவைகளை விட்டுவி டுகள்” என்று சொல்லி சலிப்படைந்தும் கொள்கின்றார்கள். கேட் பத ற்கு இனிமையாக இருக்கும் நல்ல காரியங்களை மட்டும் பேசலாமென நினைக்கின்றார்கள். ஆனால் ஒரு மனிதன் தன் ஆவிக்குரிய வாழ்விலே தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு குறை அல்லது இடறல் உண்டு என்று அறிந்திருந்தும், அவன் அதை நியாயப்படுத்தி, தன்னை மாற்றிக் கொள்ளாமல், தன் குறைவுகளை காண்பிக்கும் வழிகாட்டி களை மாற்றும்படி முயற்சி செய்பவனாக இருந்தால், வாழ்நாள் முழுவதும் அவன் பட்ட பிரயாசம் யாவும் விருதாவாய் போய் விடும். அப்படிப்பட்டவர்களுக்கு முடிவிலே நியாயத்தீர்ப்பும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும் என வேதம் கூறுகின்றது.

ஜெபம்:

பாவத்திலிருந்த என்னை மீட்டுக் கொண்ட தேவனே, சத்தியத்தை அறிந்த பின்பும் துணிகரமாக பாவத்திலே நிற்கும் பெரும் பாதகத்திற்குள் நான் சிக்கிக் கொள்ளாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:26