புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 10, 2021)

நிலைத்திருந்து கனி கொடுங்கள்

எபேசியர் 4:14

மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலை கிறவர்களாயிராமல்


தங்கள் பிள்ளைகளை நேசிக்கும் பெற்றோர் ஆண்டுகள் கடந்து சென் றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு புத்திமதிகளை கூறுவதிலும், தவறான காரியங்களைக் குறித்து எச்சரிப்பு வழங்குவதிலும், கண்டித்து பேசுவ திலும் சலிப்படைந்து போவதில்லை. ஆனால் பிள்ளைகனோ தங்கள் பெற்றோரின் புத்திமதிகளையும், எச்சரிப்பையும், கண்டிப்பையும் தின மும் கேட்பதால் “அதே குரல், ஒரே செய்தி” என்று சலிப்படைந்து போகி ன்றார்கள். இது பிள்ளைகளின் மன திலே ஒட்டிக் கொள்ளும் மதியீனம். மோசே என் னும் தேவ ஊழியரின் நாட்களிலே, மோசே வழியாக தேவ னாகிய கர்த்தர் செய்த மகா பெரி தான அதிசயங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டார்கள். ஆனால் நாட்கள் கடந்து செல்லும் போது, ஜனங்களில் சிலர் சபையை குழ ப்பும் கலகக்காரராக மாறி, தங்க ளுக்கென தலைவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். மோசேயோடு மட்டுமா தேவன் பேசுவார்? எங்களோடு பேச மாட்டாரா? மோசே ஜனங்களை தவறாக வழிநடத்துகின்றார் என்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அதனால் அவர்கள்மேல் தேவ னுடைய கோபம் பற்றியெரிந்ததால், வனாந்தரத்திலே அழிந்து போனா ர்கள்;. பிரியமானவர்களே, நித்திய ஜீவனை தருவேன் என்பதே பிதா வாகிய தேவன்; நமக்கு கொடுத்த வாக்குத்தத்தம். நாம் யாவரும் அதை பெற்றுக் கொள்ளும்படியாக நாளுக்கு நாள் தேவ சாயலிலே வளரந்து வருகின்றோம். நம்மை பக்திவிருத்தியடையச் செய்யும் தேவ செய்தி யெல்லாம் அதைக் குறித்ததாகவே இருக்கும். உங்கள் சபையிலே, உங்கள் மேய்ப்பரின் குரலை வாரந்தோறும் கேட்கும் போது அதே குரல், ஒரே செய்தி என்று மதியீனமான பிள்ளைகளைப் போல சலிப்ப டைந்து போய்விடாதிருங்கள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் கேட்கும் போது அது உங்களுக்கு சலிப்பாக இருந்தால், உணர்வுள்ள இருதயத்தையும், பிரகாசமுள்ள மனக்கண்களையும் கர்த்தர் உங்களு க்கு தந்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். புதிய வெளி ப்பாடுகள் என்ற பெயரில், தந்திரமாக போதிக்கப்படுகின்ற பலவித காற்றினாலே அங்குமிங்குமாக அலைகளைப்போல அடிபட்டு அலைகிற வர்களாயிராமல், தேவ வார்த்தையின்படி நாளுக்கு நாள் கிறிஸ்துவுக் குள் எல்லாவற்றிலேயும், நீங்கள் வளர்ந்து பெருகுங்கள்.

ஜெபம்:

வழிநடத்திச் செல்லும் அன்பின் தேவனே, என் சுய விருப்பப்படி, அங்குமிங்குமாக அலைந்து திரியாமல், கற்றுக் கொண்ட உம்முடைய வார்த்தைகளின்படி கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:6-8