புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 09, 2021)

அளவிட முடியாத பலன் உண்டு

1 யோவான் 2:25

நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.


தேவன் குறித்த எல்லைக்குள், தங்கள் வாழ்க்கையை காத்துக் கொள் கின்றவர்களுக்குரிய பலன் என்ன? இவர்கள்: கர்த்தருக்காய் காத்திரு க்கின்றவர்களாதலால் புது பெலடைந்து கழுகுகளைப்போலச் செட்டை களை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையா ர்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். கர்த்தர் அருளிய வேதத்தில் தின மும் தியானமாக இருப்பதால், தமது வாழ்விலே நற்கனிகளை கொடு க்கின்றார்கள். அநித்தியமான இந்த பூவுல வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் உண்டு. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. மனி தனுடைய ஆண்டுகளுக்கு ஒரு எல்லை உண்டு. இந்த பூமியிலே, பாடுகளோடு வாழும் மனிதன் அந்த தனக்கென தரப்பட்ட சொற்ப ஆண்டுகளை தேவனுடைய பிரணமானத்தின்படி காத் துக் கொள்வானாக இருந்தால், அவன் பரமனோடு பரலோகிலே நீடூழி யாய் வாழும் வாழ்க்கையை பெற்றுக்கொள்வான். நல்ல நிலத்திலே விதைக்கப்பட்ட விதைகள் பன்மடங்காக பலன் கொடுப்பது போல இவ ர்கள் அழிவுள்ளதை விதைத்து, அழியாமையை சுதந்தரித்துக் கொள்கின் றார்கள். நாம் அந்தப் பாக்கியத்தை பெற்றுக் கொள்ளும்படியாக, நம் பாவங்களுக் குரிய பரிகாரத்தை செலுத்தும்படி விலை மதிக்க முடியாத தம்முடைய இரத்தத்தை ஆண்டவராகிய இயேசு சிந்தினார். அகலமும், ஆழமும், நீளம், உயரமும் அறிய முடியாத, அறிவுக்கெட்டாத எல்லை யில்லாத உன்னத அன்பை அவர் நம்மேல் பொழிகின்றார். மேற்கு க்கும் கிழக்குக்கும் உள்ள தூரத்தை அளவிட முடியுமோ? அது எவ்வ ளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். சொல்லிமுடியாத ஈவுகளை அவர் நமக்கு செய்திருக்கின்றார். எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் எங் கள் இருதயங்களையும் எங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்கு ள்ளாகக் காத்துக்கொள்ளும்படி செய்கின்றார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். தமக்காக காத்திருக்கின்றவர்களை தம்மோடு சேர்த்துக் கொள்ளும் படியாக ஆண்டவராகிய இயேசு மறுபடியும் வருவார். அவர் வெளிப் படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டு ப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்தி ருப்போம். எனவே அவர் குறித்த எல்லையை மாற்றிப் போடாதிருங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனை தருவேன் என்று வாக்குரைத்த தேவனே, அழியாமையை பரலோகிலே தரித்துக் கொள்ளும்படிக்கு இந்த பூமியில் வாழும்வரை உம்முடைய வார்த்தையின் வழியில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10