புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2021)

நம்முடைய எல்லையை காட்டும் வேதம்

சங்கீதம் 119:1

கர்த்தருடைய வேதத்தி ன்படி நடக்கிற உத்தம மார் க்கத்தார் பாக்கியவான்கள்.


புருஷனுக்கும் மனைவிக்குமுரிய தேவ பிரமாணங்களைக் குறித்து கடந்த இரண்டு நாட்களாக தியானித்தோம். இன்னுமாய், பிள்ளைகள், வாலிபர்கள், வயோதிபர்கள், எஜமான்கள், ஊழியர்கள், அடிமைகள், அதிகாரிகள், போதகர்கள், விதவைகள், திக்கற்றவர்கள், ஒடுக்கப்பட் டோர், வாழ்விழந்தோர் யாவருக்குமுரிய தேவ பிரமாணங்களை நாம் சத்திய வேதத்திலே காணலாம். ஒவ்வொரு இடத்திலும் அன்பும், அர்ப்பணிப்பும், கீழ்படிதலும், பாடு களை சகிப்பதும் குறிப்பிடப்பட்டிரு ப்பதைக் காணலாம். அதாவது, நான் யாராக இருந்தாலும், எந்த நிலை யிலே இருந்தாலும், “அவன் எனக்கு செய்த தீமைக்கு தீமை செய்வேன்” என்ற எண்ணம் ஒரு மனிதனானவனு டைய எண்ணத்திலே இருக்கும் என் றால், அவனிடத்தில் தேவ அன்பு இன்னும் இல்லை. அவன், நன்மை செய்து கிறிஸ்து பாடுகளை அனுபவித்தது போல தன்னை இன்னும் அர்ப்பணிக்கவில்லை. அவன் வாழ்விலே அவன் தேவ வசனத்திற்கு கீழ்படிய வேண்டும் என்ற எண்ணம் இன்னும் இல்லை. பிரியமானவர்களே, தேவன் உங்கள் வாழ்க்கையில் குறித்த எல்லையை மாற்றாதிருங்கள். ஆண்டுகள் கட ந்து உலக நாகரீகம் மாறிப் போகலாம். இப்போது எல்லாமே நவீனமய ப்படுத்தப்ப ட்டிருக்கின்று என்று கூறலாம். ஆனால் தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்.இந்த உலகிலே, தேவ னுடைய பிரமாணங்கள் பல மனிதர்களுக்கு பைத்தியமாகவும், அநாக ரீகமாகவும் தோன்றுகின்றது. தேவ ஞானத்திற்கு பதிலாக, உலக ஞான த்தையே மனிதர்கள் தெரிந்து கொள்கின்றார்கள். மனுஷனுக்குச் செம் மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். தேவனுடைய வசனம் ஒருபோதும் அவமாய் போவதில்லை. அவரு டைய பரிசுத்தம் மாறிப்போவதில்லை. அவருடைய வசனம் ஒரு போதும் பெலனற்றுப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையிலே உங்களோடு தின மும் இடைப்படுகின்றவர்கள்: குடும்ப அங்கத்தவர்கள், சக தொழி லாளிகள், சக மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், தேவ பிரமாணத் தைவிட்டு தவறிப்போவதால், நீங்களும் தேவ பிரமா ணத்தையும், தேவன் உங்களுக்கு குறித்த எல்லையையும் தள்ளிப் போடாதிருங்கள். கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார் க்கத்தார் பாக்கியவான்கள். அவர்கள் பரலோகத்திலே நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, காலங்கள் மாறிப் போனாலும் உம்முடைய வாக்கு மாறிப் போவதில்லை. அடியேன் உம் வாக்கில் நிலைத்திருக்கும்படிக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:7-8