புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2021)

அர்ப்பணிப்பும் கீழ்படிதலும்

1 பேதுரு 3:2

அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.


கிறிஸ்துவுக்கு பிரியமாக நடக்க மனதாயிருக்கின்றவர்களுடைய வாழ் விலே அர்ப்பணிப்பும், பாடுகளை சகிப்பதும் இன்றியமையாதது. இது வீட்டிலே சொந்தக் குடும்பத்திலே ஆரம்பிக்கபட வேண்டும். அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; என்று பரிசுத்த வேதாகமம் ஒரு எல்லையை மனைவிகளுக்கு அலங்கா ரமாக கொடுத்திருக்கின்றது. இந்த அர்ப்பணிப்பும், கீழ்படிதலும் புருஷனுடைய நற்குணாதிசயங்களுக்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் வெகுமதி அல்ல. அதாவது, என்னு டைய புருஷன் என்னை நேசிக்கி ன்றார். அவர் கடுமையாக உழைக்கின்றார். குடும்பத்தைப் பார்க்கின்றார் என்றபடியால் நான் அவரின் பிரயா சங்களுக்கு பதிலாக என்னை அர்ப்ப ணித்து, கீழ்படிந்திருப்பேன் என்பது பொருளல்ல. மனைவிகளே, உங் கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் என்பது தேவன் மனை விகளுக்கு கொடுத்த பிரமாணம். தேவனுடைய பிரமாணத்தை நிறை வேற்றும் பாதையிலே பாடுகள் உண்டு. மீட்பராகிய கிறிஸ்து நன்மை செய்து எப்படியாக பாடுகளை சகித்தாரோ அந்தப்படியே மனைவிகளும் தங்களை அர்ப்பணித்து, பாடுகளை சகிக்கும் போது, தேவனுடைய பிரமாணம் அவர்களில் நிறைவேறும். நாம் நம்மை ஆளுகின்ற நாட்டின் அதிகாரிகளுக்கும், நாம் வேலை செய்யும் இடத்திலுள்ள அதிகாரங்க ளுக்கும் கீழ்படிந்திருப்பதால், அவர்கள் செய்வது எல்லாம் சரி என்பது பொருள் அல்ல. நாம் எப்போதும் எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரமாகிய தேவனுக்கு உட்பட்டிருக்கின்றோம். அதனால், அவர் நிமித்தமாக இந்த பூமியிலுள்ள அதிகாரங்களுக்கு அவருக்குள் கீழ்படிகின்றோம். அதற்கு மேலாக, சொந்த புருஷன் மனம் மாறும்படியாகவும், அவன் தன் மனைவியின் அர்ப்பணிப்பையும் கீழ்ப்பதலையும் கண்டு, அவள் நிமித்தம் தேவனாகிய கர்த்தரை மகிமைப் படுத்தும்படிக்கு, அவள் புருஷனைக் குறித்த அன்போடு அவனுக்கு கீழ்படிந்திருக்க வேண்டும். ஒரு புருஷன் அநியாயக் காரணாகவே இருந்தால், அவன் அதற்குரிய பலனை அடைவான். உங்கள் புருஷன் அநியாயக் காரனணாக இருந்து அழிந்து போவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? அல்லது மனம் மாறி நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று வாஞ் சிக்கின்றீர்களா? புருஷனை ஆதாயப்படுத்திக்கொள்ள விரும்பினால், கர்த்தர் குறித்த எல்லைக்குள் அலங்காரமாக அடங்கியிருங்கள்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, என் குடும்பத்திலே நான் சமாதானத்தை கெடுத்துப் போடுகின்றவனா(ளா)க அல்ல, கிறிஸ்துவைப் போல சமாதானத்தை உண்டு பண்ணுகின்றவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:22-23