புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 06, 2021)

புருஷர்களுக்குரிய பிரமாணம்

எபேசியர் 5:25

புருஷர்களே, உங்கள் மனை விகளில் அன்புகூருங்கள்;


“என்னுடைய குடும்ப நிலைமை உங்களுடையது போல அல்ல. என் குடும்பத்திலிருக்கும் விவகாரங்களானது எனக்கு மட்டும் தான் தெரியும். அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை” என்று ஒரு குடுபத் தலைவன் தன் சபைப் போதகரிடம் கூறினான். வயதான போதகர் அவ னை நோக்கி: தம்பி, உன்னுடைய தனித்துவான நிலைமையானது என க்குத் தெரியாது ஆனால் உன்னை அன்பு கூர்ந்து அழைத்த தெய்வம் இயேசு அதை அறிந்திருக்கின்றார். உன் நீதி நியாயங்களை அவரிடம் கூறு. யாவற்றிற்கும் மாறாத பிரமா ணத்தை கொடுத்த கர்த்தர் குடும்ப வாழ்க்கை க்கும் நமக்கு பிரமாணங்களை கொடுத்திருக்கின்றார். இந்த உலக த்திலே உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு என்பதன் பொருள் என்ன? அந்த உபத்திரவமாது தேவனை அறியாத மனிதர்களிடம் மட்டும் இருந்துதான் வருமா? ஒரு வேளை அந்த உபத்திரவம் உன் மனைவி வழியாக உனக்கு உண்டாகலாம் அல்லது உன் பிள்ளைகள் வழியா கக்கூட உண்டாகலாம். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்க ளைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களு க்காக ஜெபம்பண்ணுங்கள் என்ற வார்த்தைகளின்படி நீ உன் சத்துரு க்களுக்கு கூட அப்படியாக இருக்க வேண்டும் என்றால் உன் மனை வியும் உன் பிள்ளைகளும் எத்தனை அதிகம். உன் மனைவியானவள் கர்;த்தரின் வார்த்தையின்படி உனக்கு கீழ்படியாமல் இருப்பதினால் நீ அவளை வெறுத்து தள்ளுவது தேவ நீதியாகுமோ? தேவனானவர், உன் மனைவிக்கு கொடுத்த எல்லையை அவள் மீறி நடப்பதால், தேவன் புரு~னக்கு கொடுத்த எல்லையை மீறுவது தேவனுக்கு முன்பாக உனக்கு நியாயமாகுமோ? உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநே கிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. தேவனாகிய கர்த்தர், புரு~னை குறித்து கொடுத்த பிரமாணத்திற்குள் நீ வாழ்வாயானாள் அவர் உன்மேல் பிரியமாயிருப்பார் என்று பதிலளித்தார். மனைவியானவளும், நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களான படியினால், அவர்களுடைய பெலவீனங்களின் நிமித்தம் அவர்களை சபித்து வெறுத்துவிடாமல், கிறிஸ்து உங்கள் மேல் நீடிய பொறுமை யுள்ளவர்களாக இருப்பது போல, உங்கள் நீடிய பொறுமையை அவர் கள் மேலே காண்பியுங்கள். தேவ ஆவியானவர் தாமே உங்களை நல் வழிப்படுத்தி நடத்துவாராக.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, தேவ சாயலிலே நாள்தோறும் பெருகும்படிக்கு என்னை அழைத்தீர். திவ்விய சுபாவங்களை நான் என் குடும்பத்திலே வெளிக்காட்டும்படிக்கு எனக்கு பெலன் தந்து என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 3:7