புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 05, 2021)

இராக்காலம் வருகிறது

யோவான் 9:4

ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த மனிதனானவன், மழைகாலம் வருவ தற்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றது என்பதை உணர்ந்தவ னாய், நாட்களை விரயப்படுத்தாமல், சீக்கரமாய் காட்டிற்கு சென்று மழைகாலத்திற்கு வேண்டிய விறகுகளை வெட்டி, அவைகளை காய விட்டு, ஈரமாகாதபடிக்கு பாதுகாப்பான இடத்திலே சேகரித்து வைத்தான். இந்த மனிதனுடைய வாழ்க்கையை சற்று சிந் தித்துப் பாருங்கள். அந்த மனிதனான வன், கோடை காலத்திற்கு ஒரு எல்லை உண்டு என்பதை அறிந்தவனாய் அந் நாட்களிலே செய்யப்பட வேண்டிய வாழ் க்கைக்கு அத்தியவசியமான முக்கிய விடயங்களைக் குறித்து கவனமுள்ளவனாக இருந்தான். பிரியமானவ ர்களே, “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.” என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். தேவ கிருபையின் நாட்கள் நமக்கு ஈவாக கொடுக்கப்பட்டிருக் கின்றது. தேவன் பரலோகத்தில் இருக்கின்றார். அவருடைய கிருபை ஒருநாளும் ஒழிந்து போவதில்லை. ஆனால், இந்த பூமியிலிருந்து தேவ கிருபையின் நாட்கள் முடிவதற்குரிய எல்லை குறிக்கப்பட்டிருக்கின்றது. அந்த கிராமத்தில் வசித்து வந்த அந்த குடியானவனைப் போல நாமும் ஞானமுள்ளவர்களாக நாட்களை பிரயோஜனப் படுத்திக் கொள்ள வேண்டும். செல்வத் திரட்சியுள்ள பட்டணங்களிலே வாழும் மனிதர்கள், விறகுக ளைக் குறித்தோ, தண்ணீரைக் குறித்தோ அல்லது உணவைக் குறித்தோ கவலையடைவதில்லை. ஆனால் அவர்கள் கோடை காலம் முடிவதற்கு முன், தாம் வாழ்க்கையை உல்லாசமாக கழிக்க வேண்டும் என்று வாழ்கின்றார்கள் இதனால் சில மனிதர்களுடைய வாழ்க் கையிலே கோடை காலங்களிலே, ஆலயத்திற்கு சென்று தேவனை ஆராதிப்பது கூட இரண்டாவது இடத்திற்கு சென்று விடுகின்றது. அது போலவே தங்கள் ஆவிக்குரிய வாழ்விலும், தாங்கள் இந்தப் பூமியிலே ஆரோக்கியமாக இருக்கும் நாட்களிலே இந்தப் பூமியிலே ஆஸ்திகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று அயராது உழைப்பதால், பரலோக தரிசனத்தை குறித்து உணர்வு அற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு வருகின்ற நாட்கள் சமீபமாக உள்ளது. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றெ ன்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், கிரயைகளை நடப்பிப்போம்.

ஜெபம்:

தெய்வீக சாயல் அடையும்படி அழைத்த தேவனே, என் வாழ்விலுள்ள மாம்சத்தின் கிரியைகளை ஆரம்பத்திலேயே விட்டுவிட ஞானத்தின் ஆவியை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 13:11-14