புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 04, 2021)

கர்த்தர் குறித்த கால எல்லை

ஆதியாகமம் 19:17

உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப்பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே.


அக்காலத்திலே, சோதோம் என்னும் பட்டணம் செல்வ செழிப்புள்ளதாக இருந்தது. அதன் குடிகள் அகங்காரிகளும், பொல்லாதவர்களும், கர்த்த ருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். இக்காலத்திலே நாம் கேள்விப்படுவது போன்ற அலங்கோலமான பாலியல் பாவங்கள் நிறை ந்ததாக இருந்தது. (ஆதி 13:13, எசே 16:49, ஆதி 19:1-5). அங்கே லோத்து என்னும் ஒரு மனு~ன் நீதிமானாக இருந்த போதிலும், அந்த தேசத்தின் எல்லைகளுக்குள் குடியி ருக்கும்படி தெரிந்து கொண்டான். அந்த பட்டணத்தின் அக்கிரமம் பெரி யதாக இருந்ததால் சர்வ வல்லமை யுள்ள தேவன் அந்த பட்டணத்தின் முடிவுக்கு காலத்தை குறித்தார். தேவ னால் அனுப்பப்பட்ட தூதர்கள் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறா ர்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்;. இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது. இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே வரவிருக்கும் அழிவைக் குறித்துப் பேசினான்;. அவனுடைய மருமக்கள் மாரின் பார்வைக்கு அவன் தம்மை பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. தேவனுடைய தூதர்கள்: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் லோத்து அழியாதபடிக்கு அந்தப் புரு~ர் அவன் கையையும், அவன் மனை வியின் கை யையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடி த்து, அவ னைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டு, பின் னிட்டு பாராமல் ஓடிப் போங்கள் என்று கூறினார்கள். கர்த்தர் குறித்த காலத்தை பரிகாசம் செய்த அவனுடைய மருமக்கள் அந்த பட்டண த்தோடே அழிக்கப்பட்டார்கள். லோத்தினுடைய மனைவியின் இருதயம்; சோதோமை பற்றியிருந்ததால் அவள் பின்னிட்டு திரும்பிப் பார்த்தாள். அவள் தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்தை அற்பமாக எண்ணிணாள். இதினிமித்தம் உப்புத்தூணாய் மாறிவிட்டாள். பிரியமானவர்களே, கர்த்தர் குறித்த கால எல்லை நெருங்குகின்றது என்று, இன்று நீங்கள் கேட்கும் எச்சரி ப்பின் சத்தத்தை அசட்டை செய்யாதிருங்கள்.

ஜெபம்:

எச்சரிப்பின் வார்த்தைகளை தரும் தேவனே, நித்திய ராஜ்யத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாங்கள், பின்னிட்டு திரும்பாதபடிக்கு உம் வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ கிருபை செய்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யூதா 1:15