புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2021)

எல்லையைத் தாண்டிடுவோம்

எபேசியர் 4:22

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,


எகிப்திலே இருந்த தேவனுடைய ஜனங்கள் அடிமைத்தனத்தினால் தவி த்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவனாகிய கர்த்தரோ, தம்முடைய ஓங்கிய புயத்தினாலும், பலத்த கரத்தினாலும், தம்முடைய ஜனங்களை அடிமைத்த னத்திலிருந்த விடுதலையாக்கி, சுயா தீனத்தை கொடுத்து, செழிப்புள்ள கானான் தேசத்தில் சேர்ப்பேன் என்று வாக்குரைத்தார். சர்வவல்லமையு ள்ள தேவன் முன்குறித்த நாளிலே, ஜன ங்கள் யாவரும் அடிமைத்தனத்தின் எல்லையாகிய எகிப்து தேசத்தின் எல் லையை தாண்டினார்கள். எகிப்தின் எல்லைகளுக்குள் இருந்த போது, அவ ர்கள் மெய்த் தேவனாகிய கர்த்தரை மறந்து எகிப்தில் விக்கிரகங்களை தங்கள் தேவனாக சேவித்தார்கள். எகிப்திலிருந்த போது மாம்ச இச் சைகளின்படி வாழ்ந்து வந்தார்கள். (யோசுவா 24:14-16). பின்பு, சுயா தீனமாக வாழ்க்கை வாழும் நாட்களிலே, சவால்களும் நெருக்கங்க ளும் சூழ்ந்து கொள்ளும் போது, மறுபடியும் தாங்கள் பெற்ற சுயா தீனத்தை மறந்து, தாங்கள் கடந்து வந்த எகிப்தின் எல்லைக்குள் உட்பிரவேசிக்க மனதுள்ளவர்களாகவே இருந்தார்கள். அடிமைத்தனத்தின் பாவ வாழ் க்கையை மறுபடியும் வாஞ்சித்தார்கள். அவர்கள் தேவனுக்கு பிரிய மற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதுபோலவே, நாமும் இரட்சகர் இயே சுவை அறியாத நாட்களிலே இந்த உலகத்தின் பாவ எல்லைக்குள் கட்டப்பட்டிருந்தோம். தேவ கிருபையானது நம்முடைய வாழ்வில் வெளி ப்பட்ட போது, இந்த உலகத்தின் பாவ வாழ்க்கையின் எல்லையைத் தேவ பெலனத்தினால் தாண்டினோம். வாழ்வில்; சுயாதீனத்தைப் பெற் றுக் கொண்டோம். இந்த நாட்களிலே, வாழ்விலே சவால்களும், நெருக் கங்களும் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது, பழைய பாவவாழ்வின் எல்லைக் குள் மறுபடியும் உட்படலாகாது. நாம் இந்த உலக போக் குக்கு மறுபடியும் திரும்பாமல், நம்முடைய சொந்த தேசமாகிய பரம தேசத்தின் எல்லையை நோக்கி முன் செல்லுவோம். பழைய வாழ்க்கை யிலே, பகை கசப்பு வன்மம் போன்றவைகளை மனதிலே வைத்திருந் தோம். இப்போது நாம் அந்த அந்தகார அடிமைத்தனத்தின் எல்லைக் குள் மறுபடியும் சென்றுவிடாமல், மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிரு~;டிக்கப்பட்ட புதிய மனு~னைத் தரித்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

இருளின் வாழ்வை நீக்கி ஒளியின் ராஜ்யத்திற்கு என்னை அழை த்த தேவனே, நான் மறுபடியும் இருளின் அதிகாரத்தின் எல்லைக்குள் பேகாதாபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2