புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 02, 2021)

என் வாழ்வின் எல்லை எங்கே?

எரேமியா 5:22

அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தா லும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத் தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதி ராதிருப்பீர்களோ?


ஆழி இரைந்து, அதன் அலைகள் மோதியடித்தாலும், சமுத்திரத்தின் ஜலங்கள் கொந்தளித்தாலும் அவை மேற்கொள்ளாதபடிக்கும், அவை கள் இரைந்தாலும் சமுத்திரத்தின் ஜலம் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திர த்தின் மணலை, தேவனாகிய கர்த்தர் அதற்கு எல்லையாய் வைத்திருக்கி றார். இப்படியாக நாட்டுக்கு நாடு, வீட் டுக்கு வீடு என்று இந்த உலகத்திலே நாம் காணும் யாவற்றிற்கும் எல்லை வரையறுக்கப்பட்டிருக்கின்றது. “நீ எல் லையை மீறி என் வாழ்வின் தனிப் பட்ட காரியங்களுக்குள் வராதே” அல் லது “நீ எல்லை மீறிவிட்டாய்” என்று மனிதர்கள் மிரட்டல்களை விடுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் சில மனிதர்கள் “இது என் வாழ்வு, என்னு டைய கனவு, நான் விரும்பியதை செய்வேன்” என்று வரையறையற்ற வாழ்க்கை வாழ்கின்றார்கள். மனிதன் தன் வாழ் நாட்களிலே தீர்மானங்களை சுயமாக அவன் எடுத்துக் கொள் ளும்படிக்கு அவனுக்கு சுயாதீனத்தை தேவன் கட்டளையிட்டிருக்கின் றார். அங்கே “வாழ்நாட்கள்” என்ற ஒரு எல்லையானது வைக்கப்பட்டிரு கின்றதென்பதை அவன் உணராதிருக்கின்றான். குழந்தை பருவத்திற்கு ஒரு எல்லை உண்டு, சிறு பிள்ளைகளாக இருப்பதற்கு ஒரு எல்லை உண்டு. வாழ்வின் வசந்த காலம் எனப்படும் வாலிபத்தின் நாட்களுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் மனிதனோ இவைகளைக் குறித்து சிந்த னையற்றவனாக, தான் பெற்றுக் கொண்ட சுயாதீனத்தை தன் மாம்சத் தின் இச்சைகளையும், உலக ஆசைகளையும் நிறைவேற்ற பயன்படுத்து கின்றான். ஒருவேளை இந்தப் பூமியிலே அவைகள் நன்மையானவை களாக தோன்றலாம். ஆனால் இந்த பூமியும் அதிலுள்ள யாவும் அழிந்து போவதற்கும் தேவன் ஒரு எல்லையை வைத்திருக்கின்றார். பிரியமா னவர்களே, உங்கள் வாழ்வின் எல்லை எங்கே? இதை குறித்து நீங்கள் எண்ணமுள்ளவர்களாக இருக்கின்றீர்களா? தேவனுடைய பிரமாணங் களை தன் எல்லையாக கொண்டிருக்கின்ற மனிதன் ஞானமுள்ளவன். சமுத்திரத்திற்கும் எல்லையைக் குறித்த தேவனுடைய பிரணமானங் களை அற்பமாக எண்ணாமல், வாழ்வின் எல்லையைக் குறித்து தியானம் செய்யுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் காணும் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து போகும் என்பதை உணர்ந்து வாழ்வு தரும் உம்முடைய பிரமாணத்தின் எல்லைக்குள் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எண்ணாகமம் 14:1-4