புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 01, 2021)

எங்கள் தியானம்

யோசுவா 1:8

இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக


இன்றைய உலகிலே, உடற்பயிற்சி என்ற போர்வையிலே தியானத்தை குறித்து பல விதமாக கற்றுக் கொடுக்கின்றார்கள். தியானம் செய்யும் போது, எதையுமே சிந்திக்காமல், மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள். அவைகளினாலே நீங்கள் இழுப்பு ண்டு போய் விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். எமது வாழ்விலே எந்த ஒரு காரியத்தைக் குறித்தாவது தேவனை அறியாதவர்கள் புதிதான ஒரு வி~யத்தைக் கூறும்போது அதை வேத வார்த்தையின் வெளிச்ச த்திலே ஆராய்ந்து பாருங்கள். தியா னத்தைக் குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகின்றது? இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிரு க்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய் (யோசுவா 1:8). என் படுக்கை யின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன் (சங்கீதம் 63:6). என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங் கீதம் 19:14). தேவனுடைய வழிகளைக் குறித்த தியானமே, பிரதானமாக நம் மனதிலே எப்போதும் இருக்க வேண்டும். மனு~னுக்குச் செம்மை யாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரண வழிகள். இந்த உலகிலே துன்;மார்க்கர் கூறும் ஆலோசனைகள் உண்டு. பாவிகள் நிற்கும் வழிகள் உண்டு. ஆண்டவர் இயேசுவைக் குறித்து பரியாசம் செய்பவர்கள் உட்காரும் இடங்களுண்டு. அவைகளை நீங்கள் உங் களை விட்டு அகற்றி, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இர வும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருங்கள். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக் கிறது. உங்கள் சுவாசம் உங்களிலிருக்கும் வரைக்கும் தேவனுடைய வார்த்தை உங்கள் சிந்தையை விட்டு விலகாதிருப்பதாக. அவருடைய வேதமே மனமகிழ்ச்சி. அவருடைய வார்த்தைகளே ஒள~தம். அவை களே நம் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்றது.

ஜெபம்:

ஜீவ சுவாசத்தை எனக்குத் தந்த தேவனே, அந்த சுவாசம் என்னி லிருக்கும் வரைக்கும் உம்முடைய வார்த்தையையே நான் தியானித்து அதன்படி வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-14