புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 31, 2021)

நன்மையை கண்டடைகின்றவன் யார்?

1 கொரிந்தியர் 10:12

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்


ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டியிலே, 50 மையில் மாரத்தான் ஓட் டப்பந்தையப் போட்டி நடைபெற்றது. அதிலே அநேக போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். ஆரம்பத்திலே சிலர் மெதுவாயும், வேறு சிலர் துரிதமாகவும் ஓடிச் சென்றார்கள். அந்த ஆரம்ப ஓட்டத்தைக் கண்ட சில பார்வையாளர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் பலதரப்பட்ட கருத்து க்களை கூறி விமர்சித்தார்கள். ஆனால் அந்தப் பந்தையப்போட்டி முடிவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் இருந்தது. அந்த கால எல்லைக்குள்ளே, அந்த ஓட்ட ப்பந்தையப் போட்டியில் பல மாற்ற ங்கள் ஏற்படலாம். அது முடிந்த பின்பும், ஒழுங்காக ஓடியவர்கள் யார் அல்லது ஒழுங்கு முறையை மீறியவர்கள்யார் என்பதைக் குறித்த முடிவை, அந்த குறிப்பிட்ட ஓட்டப்போட்டியின் நடுவரே தீர்மானிப்பார். பிரியமானவர்களே, கடந்த சில நாட்களாக நியாத்தீர்ப்பையும், கணக்கு ஒப்புவித்தலையும் குறித்து ஆராய்ந்து பார்த்தோம். நாம் ஒவ்வொருவரும் அந்த மாரத்தான் ஓட்டப் போட்டியாளர்களைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஓட்டத்தின் முடிவிலே நடுவராகிய ஆண்டவர் இயேசு அதற்குரிய பலனை நமக்கு அளிப்பார். எனவே மற்றவர்களின் ஓட்டத்தைக் குறித்து நியாயந் தீர்ப்பது நம்முடைய காரியமல்ல. நாம் யாவரும் பரலோகப் பந்தையப் பொருளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். சிலர் மெதுவாயும், சிலர் துரித மாயும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். துரிதமாக ஓடுகின்றவர்களின் நாளைய நிலை என்ன என்பதையும், மெதுவாக ஓடுகின்றவர்களின் நாளைய நிலை என்ன என்பதையும் நாம் அறியோம். இன்று நாம் யாவ ரும் நிர்மூலமாகாமல் இருப்பது தேவனுடைய கிருபை என்பதை மறந்து விடக்கூடாது. இன்று மனிதர்கள் மற்றவர்களுடைய வாழ்க்கையை நியா யந்தீர்க்கின்றவர்களாவும், மற்றவர்களுடைய கணக்கை குறித்து கரிச ணையுடையவர்ளாகவும் இருப்பதால், தங்கள் நிலையை மறந்து பின் வாங்கிக் போய்விடுகின்றார்கள். இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனெ ன்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். உங்கள் மேல் நீடிய பொறுமையாயிருக்கின்ற ஆண்டவர் இயேசு மற்ற வர்கள் மேலும் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கின்றார். ஒருவரும் கெட்டு அழிந்து போவது அவருடைய சித்தமல்ல. எனவே காலத்திற்கு முன் யாதொன்றைக் குறித்தும் நீங்கள் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, நீரே யாவற்றையும் அறிந்தவர். நான் மற்றவர்களின் வாழ்வைக் குறித்து அவர்களை நியாயந்தீர்க்காதபடிக்கு, என் நாவை நான் காத்துக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 21:30