புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 30, 2021)

நாம் பேசும் வார்த்தைகள்

கொலோசெயர் 4:6

உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.


பொதுவாக இரு தரப்பினர்களுக்கிடையே வழக்கொன்று நடைபெறும் போது, எதிரெதிராய் நிற்கும் இருதரத்தாரும் தங்கள் நிலையைக் குறி த்த வார்த்தைகளைக் கூறுவார்கள். இருதரத்தாரும் தமது தரப்பு நியாய த்தைக் குறித்ததான நிலைமையை சாட்சிகள் வழியாக வார்;த்தைகள் மூலம் தெரிவிப்பார்கள். அவர்களும் தங்கள் வார்த்தைகள் வழியாக தங்கள் சாட்சிகளை தெரிவிப்பார்கள். இருதரத்தாரின் சட்டத்தரணிகளும் தங் கள் கட்சிக் காரரை நியாயப்படுத்து ம்படி வார்த்தைகளை கவனமாக கூறு வார்கள். இவர்கள் யாவரின் வார்த் தைகளையும் கருத்துடன் கவனித்துக் கொண்டிருக்கும் நடுவர்கள் (துரசல வநயஅ) தங்கள் முடிவை நீதிபதியிடம் தெரிவிப்பார்கள். நீதிபதி தீர்ப்பை வார் த்தை வழியாக கூறுவார். மனிதர் பேசும் வார்த்தைகளுக்கு பின்விளை வுகள் உண்டு. சிலர் நல்ல வார்த்தைகளைப் பேசி, நீதியையும் நியா யத்தையும் நடப்பிக்கின்றார்கள். சிலரின் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்வை மேம்படச் செய்கின்றது. அதே வேளையிலே சில மனிதர்களின் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்வை கெடுத்துவிடுகின்றது. ஞானிக ளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத் தைக் கக்கும். ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபா டோ ஆவியை நொறுக்கும். கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயி லிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார் த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜன முண்டாகு ம்படி பேசுங்கள் என்று தேவ ஊழியராகிய பவுல் அறிவுரை கூறியிரு க்கின்றார். சிலரோ கெட்ட வார்த்தைகளையும், சீர்கேடான பேச்சுக்க ளையும், ஆகாத சம்பா~ணைகளையும் பேசுகின்றார்கள். அதனால் தாங்களே தங்கள் வாழ்க்கையை தீட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சிலர் சந்தர்ப்பத்திற்கேற்றபடி இராஜ தந்திரமாக பேசிக் கொள்வார்கள். மனு~ர் பேசும், கெட்ட வார்த்தைகளைக் குறித்து மட்டுமல்ல, வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்பு விக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று ஆண்டவ ராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, அவனவனுக்கு இன்னின் னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங் கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சார மேறினதாயுமிருப்பதாக. நம்முடைய வாயின் வார்த்தைகள் தேவனுக்கு பிரியமுள்ளதாக இருப்பதாக.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நான் தேவ சாயலிலே நாள்தோறும் வளர்ந்து பெருகும்படிக்கு, நான் பேசும் வார்த்தைகளைக் குறித்து கவனமுள்ளவனா(ளா)க இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:36