புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2021)

கணக்கு கொடுக்கும் நாள்

ரோமர் 14:12

ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னை க்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.


ஒரு தோட்டத்தின் சொந்தக்காரர், தன் தோட்டத்திலே வேலை செய் யும்படிக்கு சில வேலையாட்களை தெரிவு செய்து, அவரவருக்குரிய பொறுப்பை அவர்கள் கையிலே கொடுத்து, தான் திரும்பி வரும்போது, ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தின் கணக்கை செலுத்த வேண்டும் என்று கூறி தூர தேசத்திற்கு சென்றிருந்தார். சொந்தக்காரர் வர தாமத்தித்ததினால், சிலர் ஏனோ தானோ என்று வேலை பார்த்து வந்தா ர்கள். அவர் வரும் செய்தியை அறிந்த பின் நாங்கள் காரியங்களை ஒழுங்கு படுத்துவோம் என்றிருந்தார்கள். வேறு சிலரோ, தோட்டத்தின் சொந்தக்காரர் தங்களை நம்பித் தந்த பொறுப்பை மிகவும் கருத்துடன் நிறைவேற்றும்படி கடுமையாக உழைத்தார்கள். எதிர்பா ராதவிதமாக திடீரென ஒரு நாள் அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர் திரும்பிவந்தார். பயபக்தியுடன் வேலை செய்தவர்கள் அவரைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனோ தானோ என்று வேலை பார்த்த வர்கள் தோட்டத்தின் சொந்தக்காரரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். பிரியமானவர்களே,இரவிலே திருடன் இன்ன நேரத்திலே வருவான் என்று தெரியாதது போல, நம்முடைய எஜமானனாகிய இயேசுவும், நாம் எதிர்பாராத நேரத்திலே வருவார். எனவே ஒழுங்கு படுத்த வேண்டிய வைகளை உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்திலே தாமதிக்காமல் ஒழுங்கு படுத்துங்கள். இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, சகேயு என்னும் மனிதனை சந்தித்தார். அவன் அநியாயக் காரனாக இரு ந்ததினால் சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாத பாவியான மனித னாக இருந்தான். அவன் இயேசுவைக் கண்ட போது, சந்தோ~த்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். சகேயு கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டா னால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். அதாவது தன்னுடைய வாழ்க்கையின் கணக்கை தனக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலே அவன் தீர்த்துக் கொண்டான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றார். பிரியமா னவர்களே, ஆண்டவர் இயேசுவை அறிந்த நீங்கள், அவர் மறுபடி வரும்போது மகிழ்ச்சியடையும்படிக்கு இன்று உங்கள் கணக்கை சரி செய்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த தேவனே, ஆண்டவராகிய இயேசுவை சந்திக்கும் நாளிலே பெரும் மகிழ்ச்சியடையும்படிக்கு நான் என் வாழ்வை உம் வார்த்தையின்படி காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:8