புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 28, 2021)

கனி கொடுக்கும் காலம்

லூக்கா 3:8

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்


பல அம்சங்களை உள்ளடக்கிய நவீன கைக் கடிகாரமொன்றை தன் 18வது பிறந்த தின பரிசாக வாங்கித் தரும்படி ஒரு வாலிபன் தன் பெற்றோரை கேட்டுக் கொண்டான். அவன் பரீட்சையில் நல்ல புள்ளிகளை எடுத் ததால், அவனுடைய ஆசைப்படி அவர்களும் அந்த நவீன கைக்கடி காரத்தை வாங்கிக் கொடுத்தார்கள். அந்தக் கைகடிகாரத்திலே, நேரம் மாத்திரமல்ல, உடற்பயிற்சியை குறி த்த தரவுகள், உடல் ஆரோக்கியத் தை குறித்த துணுக்குகள் எல்லாம் அடங்கியிருந்தது. அவன் அந்தக் கைக்கடிகாரத்தை பரவசத்துன், தன் கைகளிலே எப்போதும் அணிந்து கொண்டான். தன் நண்பர்களுக்கும் அதை காட்டி அதன் அம்சங்களை குறித்து பெருமிதமாக பேசிக் கொண்டான். அவன் கையிலே கடிகாரம் இருந்தபோதும், அவன் எதையுமே நேரத்திற்கு செய்வதில்லை. நேரத் தோடு வீடு திரும்ப மறந்து விடுவான். நேரத்திற்கு படுக்கைக்கு போகா மல் தன் நண்பர்களுடன் இன்ரநெற்றில் விளையாடிக் கொண்டிருப் பான். குடும்பத்தினர் உணவு உண்ணும் நேரத்தில் அவன் சாப்பிடமாட் டான். அப்படியானால் அந்தக் கடிகாரத்தினால் அவனுக்குண்டான பிர யோஜனம் என்ன? அவனைவிட அந்தக் கைக்கடிகாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்தவர்களே அதிக பிரயோஜனம் அடைந்தார்கள். அதுபோலவே இன்று சிலர் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து அதிகக திகமாக பேசிக் கொள்வார்கள். நோவா, ஆபிரகாம், யோசேப்பு, மோசே, தானியேல், யோவன் ஸ்நானன் என்று எல்லா பாத்திரங்களையும் அவ ர்கள் வாழ்விலே அவர்கள் கொடுத்த நற்கனிகளையும் குறித்து சிறப் பாக பேசிக் கொள்வார்கள். ஆனால் அவர்களிலிருந்த நற்பண்புகளை யோ தங்கள் வாழ்க்கையில் கைகொள்ளுவதில்லை. எடுத்துக்காட்டாக, தேவனுக்கு பிரியமான தானியேல், சட்டப்படி, தேவனிடம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று அறிந்திருந்த போதும், தான் தினமும் செய்வதைப் போல தேவனை நோக்கி ஜெபி ப்பதை நிறுத்தி விடவில்லை. ஆனால் இன்று மனிதர்களோ ஞாயிறு ஆராதனைகளை தங்கள் மாம்ச சௌகரியங்களின்படி மாற்றிக் கொள் கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு இருக்கும் வேதத்தின் அறிவு அவ ர்கள் ஆன்மாவிற்கு எந்த பிரயோஜனத்தையும் கொடுப்பதில்லை. பிரி யமானவர்களே, கனி கொடுக்கும் காலம் இது. எனவே, வேதம் கூறும் நற்கனிகளை உங்கள் வாழ்க்கையில் வெளிக்காட்டுங்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் நாள் நெருங்குகின்றது.

ஜெபம்:

நற்கனிகளை கொடுக்கும்படி அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்ந்து நீர் விரும்பும் நற்கிரியைகளை நான் என் வாழ்வில் வெளிக்காட்ட என்னை உணர்வுள்ளவனா (ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:16