புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 27, 2021)

நியாத்தீர்ப்பின் நாள் நெருங்குகின்றது

2 பேதுரு 2:9

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.


நியாத்தீர்ப்பு, கணக்கு ஒப்புவிப்பது, கனி கொடுக்கும் காலம் போன்ற வார்த்தைகளை இன்று மனிதர்கள் பேசுவதற்கு விரும்புவதில்லை. நாம் கிருபையின் காலத்திலே வாழ்ந்து வருகின்றோம். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொ ழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக் குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். ஏனெனில் ஒருவரும் கெட்டுப் போகா மல் நித்திய ஜீவனை அடைய வேண் டும் என்று அவர் எல்லோர்மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கி ன்றார். அதனால் நாம் நியாயத்தீர் ப்பின் நாள், கணக்கு கொடுக்கும் நாள், கனி கொடுக்கும் காலம் போன் றவற்றை குறித்து உணர்வில்லாதவ ர்களாக இருக்கக்கூடாது. அக்கிரமங் களின் முடிவு என்ன? தேவ வார்த்தையைக் கேட்டும் அவபக்தியாய் வாழ்பவர்களுக்கு என்ன நடக்கும்? இவைகளை குறித்து நாம் அறிந்து உணர்வடையும்படிக்காக வேதத்திலே சில சம்பவங்ளை பார்க்கலாம். 1. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்க ப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார். 2. பூர்வ உலகத்தையும் தப்பவிடா மல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிர ளயத்தை வரப்பண்ணினார் 3. சோதோம் கொமோரா என்னும் பட்டண ங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். இவைகள் யாவையும் தேவனாகிய கர்த்தர் பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் சாட்சியாக வைத்திருக் கின்றார் (2 பேதுரு 4-6). எனவே தேவனுடைய அன்பை அறிந்த நீங் கள், தேவனுடைய பரிசுத்தத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து உணர்வற்றவர்களாக வாழாமல், உங்களையே நீங்கள் சுய பரிசீலனை செய்து கொள்ளுங்கள். ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் உங்கள் வாழ்க்கையை சூழந்து கொள்வதற்கு முன்னதாக, சகல அக்கிரம சிந்தையையும் விட்டு விலகுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நாட்கள் கொடியதாய் மாறிக் கொண்டிருக்கும் வேளையிலே, கிருபையின் நாட்களை நான் வீணடிக்காதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யூதா 1:6-8