புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2021)

எதிர்பார்த்திருந்த சந்தோஷம் எங்கே?

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


பல நெருங்கங்கள் மத்தியிலே தன் குடும்பத்தை நடத்தி வந்த தகப்பனானவன், தன் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். உயர்ந்த உத்தியோகத்தை செய்ய வேண்டும் என்று தினமும் தன் மனதிலே சொல்லிக் கொள்வான். தகப்பனானவரின் விருப்பப்படி, அவனுடைய மகனானவன், பட்டப்படிப்பின் இறுதி பரீட்சையிலே அவன் அதி விசே~ட சித்தி பெற்று, நல்ல ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து கொண் டான். இனி தன் குடும்பத்தின் குறை வுகள் தீர்ந்து விடும். சந்தோ~மாக வாழ முடியும் என்று அவன் குடும்ப த்தார் எண்ணியிருந்தார்கள். சில ஆண் டுகளுக்கு பின் அந்த வாலிபனின் வாழ் க்கையில் ஏற்பட்ட சில குழப்பங்களால் அவன் தாய் தந்தையர் மனவேதனை அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி குடும்பத்தின் பொருளாதார தேவைகள் யாவும் சந்திக்கப்பட்டது ஆனால் சந்தோ~மாக வாழ முடி யவில்லை. தன் மகனானவன் படித்து உழைத்தால் போதுமென்றிருந்த தந்தையார், இந்த உலகத்திலே பணத்தால் மனச் சாமாதானத்தை பெற் றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். பிரியமானவ ர்களே, இந்த உலகத்திலே பிள்ளைகள் படிக்க வேண்டும், நன்றாக உழை க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் இந்த உலகத்தினால் உண்டாகும் செல்வங்களினாலே மனத் திருப்தியும் சமா தானமும் உண்டாகும் என்று வாழ்வது ஏமாற்றத்தை தரும். ஒரு சிலர், உலக ஐசுவரியம் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் என்று தங்களை அறி யாமலே பணத்தின் மீதான ஆசையை தங்களுக்குள் நுழைய இடங் கொடுக்கின்றார்கள். நீங்களோ அவ்வண்ணமாக வாழாமல், முதலாவ தாக, என் பொருளாதார நிலை எப்படியாக இருந்தாலும், நான் தேவ னுக்கு பயந்து அவர் வழியிலே நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டும். அதுவே எங்கள் அனுதின ஜெபமாக இருக்க வேண் டும். இரண்டாவதாக, என்னுடைய பிள்ளைககள் படித்தாலும் உழைத்தா லும் தேவனுடைய சத்தத்தை கேட்டு, பரிசுத்த ஆவியினால் நடத்தப் படு கின்றவர்களாக வாழ வேண்டும் என்றும், சிறு வயதிலிருந்து அவர்க ளுக்காக வேண்டுதல் செய்து, தேவனுடைய வழியிலே அவர்களை நட த்த வேண்டும். கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளிலே நடக்கின்றவன், அவன் இந்த உலக ஐசுவரியம் உள்ளவனாக இருந்தாலும், இல்லாதவ னாக இருந்தாலும் எந்நிலையிலும் அவன் பாக்கியவானாக இருப்பான்.

ஜெபம்:

நித்திய சமாதானத்தின் தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் பெருமைகள் என் வாழ்வில் நிலையான சமாதானத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து உம்மை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1