புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 24, 2021)

விசுவாசத்திலே நிலைத்திருங்கள்

1 கொரிந்தியர் 16:13

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள்.


நோவா என்னும் மனிதனுடைய நாட்களிலே ஜனங்கள் தேவனைக் குறித்த உணர்வற்றவர்களாக வாழ்ந்து வந்தார்கள். மனிதர்களுடைய அக்கிரமம் பூமியிலே பெருகிற்று. அவர்களுடைய இருதயத்து நினை வுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாதவைகளாக இருக்கி ன்றதை தேவனாகிய கர்த்தர் கண்டார். அக்கிரமம் பலு;கிப் பெருகி யிருந்த அந்நாட்களிலே, நோவா என் னும் மனிதனோ, தேவ பயமுள்ள வனாக நீதியைப் பிரசங்கித்து வந் தான் (2 பேதுரு 2:5). ஆனாலும் பொல்லாத சிந்தையுள்ளவர்களாகிய ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், வெள்ளம் வந்து அவர்கள் அனைவ ரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். ஆண்டவராகிய இயேசு தான் மறுபடியும் வரும் போது, ஜனங்கள் இவ்வண்ணமாகவே தேவனைக் குறித்த உணர்வற்ற வர்களாக தங்கள் கண்போன வழியிலே உலக களியாட்டங்களிலே வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று கூறியிருக்கின்றார். தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்ப ட்டவர்களின் வி~யத்தில் சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ் செய்கின்றவர் என்று மனிதர்கள் அறிந்திருந்தும், இந்த பூமியிலே மனிதர்களிடம் விசுவாசத்தை காண்பது அரிதாக இருக்கின்றது. தாம் மறுபடியும் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ என்று ஆண்டவர் இயேசு எச்சரிப்பை கூறியிருக்கின்றார். மனு~ர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர் களாயும், தூ~pக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியா தவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள் ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியரா யிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வே~த்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் மாறிக் கொண்டே போகின்றா ர்கள். நாமோ இப்படிப்பட்டவர்களுடைய போக்கைவிட்டு விலகி, நம க்கு கொடுக்கப்பட்ட பெலத்தின்படி நீதிமானாகிய நோவாவைப் போல தேவ நீதியை எடுத்துக் கூறுவோம். விசுவாசத்திலே நிலைத்திருப்போம்.

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, நீரே சர்வ வல்லமையுள்ள தேவன், நீர் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்னும் சத்தியத்தை மறந்து இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கி விடாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 18:8