புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2021)

அக்கரைக்குப் போவோம் வாருங்கள்

யோவான் 14:3

நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.


ஒரு நாள் மாலை வேளையிலே, ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் அக்கரையை நோக்கி படவை ஓட்டினார்கள். அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலைய ணையை வைத்து நித்திரையாயி ருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோ கிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரை யாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற் போயிற்று என்றார். அந்த நாள் முழுவதும் இயேசு படவிலிருந்தபடி கரையிலே நின்ற திரளான ஜனங்களுக்கு விதையாகிய தேவனுடைய வார்த்தையையும்;, நிலமாகிய மனிதர்களுடைய இருதயங்களையும், அது பலன் கொடுப்பதையும் குறித்து உவமைகள் வழியாக பேசி, பின்பு சீ~ர்களுக்கு அவைகளை விவரித்து கூறி, மேலும் தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிரு க்கின்றது என்று அவர்களிடம் கூறியிருந்தார். இவர்கள் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைiயின் வல்லமையை கண்டவர்கள். அவர் அக் கரைக்கு போவோம் வாருங்கள் என்று கூறியிருந்தார். அந்த வார்த்; தையை எந்த சூழ்நிலையும் தடுக்க முடியாது. இயேசு சொன்னபடியே அவர்கள் அக்கரைக்கு போய் சேர்வார்கள். அன்று அவருடைய சீஷர்கள் சூழ்நிலையை கண்டு பயந்து, தாங்கள் அக்கரைக்கு போகா மல் மடிந்து போகப்; போகின்றோம் என்று பயப்பட்டார்கள். நாமும் சில வேளைகளிலே வாழ்வின் சூழ்நிலைகளைக் கண்டு திகிலடைந்து விடுகி ன்றோம். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பெரிதான வாக்குத்தத்தம் என்ன? அக்கரையாகிய மோட்ச வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்ல மறுபடியும் வருவேன் என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். அவர் சொன்னதை செய்யும் தேவன். எனவே, ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை விசுவாசியுங்கள். வாழ்வில் வரும் நெருக்கடிகளைக் கண்டு தளர்ந்து போகாமல். அவிசுவாசத்தின் வார்த்தைகளை அறிக்கை யிடாமல், அவர் எங்களை அழைத்துச் செல்ல வருவார் என்ற வாக்கை பற்றிக் கொண்டிருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என் வாழ்விலே நான் சந்திக்கும் நெருக்கடிகளைக் கண்டு திகிலடையாமல், உம்முடைய வார்த்தையை நம்பி உமக்காக காத்திருக்க கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மாற்கு 4:35-41