புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 22, 2021)

அவிசுவாசம் நீங்கும்படி செய்யும்

மாற்கு 9:24

விசுவாசிக்கிறேன் ஆண் டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய் யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.


ஒரு சமயம் ஊமையான ஒரு ஆவி பிடித்த ஒருவனை அவன் தகப்பனானவன் ஆண்டவர் இயேசுவினிடத்தில் கொண்டு வந்தான். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது. அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறு வயது முதற்கொண்டே உண்டாயிரு க்கிறது. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீ ரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்ய க்கூடுமானால், எங்கள் மேல் மனதிர ங்கி, எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், இயேசு அந்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப் போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்க தாகச் செத்தவன்போலக் கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். பிரியமா னவர்களே, சில மனிதர்கள் தங்கள் முரட்டாட்டத்திலே, மனதைக் கடினப்படுத்தி, ஆண்டவர் இயேசுவின்மேல் விசுவாசம் வைக்காமல் இருக்கின்றார்கள். ஆனால் அந்தத் தகப்பனானவன் அப்படிப்பட்டவன் அல்ல. தன் மனதைத் திறந்து, ஆண்டவர் இயேசுவை நோக்கி தன் உண்மை நிiலையை அவருக்கு அறிவித்தான். தன் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று கேட்டான். அதே பிரகாரமாக, நாமும் நம்மைத் தாழ்த்தி நம்முடைய உண்மை நிலைமையை மனதார நம்முடைய ஆண்;;டவர் இயேசுவுக்கு கூறும் போது, அவர்தாமே நமக்கு உதவி செய்கின்றவராயிருக்கின்றார். பல ஆண்டுகளாக வாதிக்கப்பட்ட அந்த மகனானவனுக்கு ஆண்டவர் இயேசு விடுதலையைக் கொடுத்தார். எனவே உண்மையுள்ள இருதயத்தோடு இயேசுவை நாடுங்கள்.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, என் வாழ்வின் பெலவீனங்களை நீர் அறிந்திருக்கின்றீர். உம்முடைய சமுகத்திலே நான் என்னைத் தாழ்த்தி ஒப்புக் கொடுக்கிறேன். நீர் என்னை விடுதலையாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:15