புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 21, 2021)

குறைவுகளை தெரியப்படுத்துங்கள்

எபிரெயர் 13:8

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.


ஒரு ஓய்வுநாளில் ஆண்டவராகிய இயேசு ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிரு ந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தி னின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். பிரிய மானவர்களே, ஒரு வேளை இந்த சம் பவத்திற்கு முன்பும் அந்த ஸ்திரி அநேக தடவைகள் ஆலயத்திற்கு சென்றிருக்கலாம் ஆனால் குறித்த நாள் வந்தபோது சுகமளிக்கும் தெய்வம் இயேசு அவளுக்கு சுகம் கொடுத்தார். இன்று உங்கள் சரீரத்திலும் ஏற்பட்டிருக்கும் வியாதிகளை குறித்து சோர்ந்து போய்விடாதிருங்கள். சில சமயங்களிலே, மனிதர்கள் தங்கள் குறைகள் நிறைவாகும்படி ஜெபிக்கின்றார்கள். ஆனால் நாட்கள் கடந்து செல்லும் போது, மனச் சோர்வடைந்து, மனக்கிலேசத்திலே மற்றவர்களோடு பேசும் போது, “வாழ்க்கை இப்படித்தான், இனி என்ன செய்வது, இனி இப்படியே வாழ பழகிக் கொள்ள வேண்டும்” என்று தாங்கள் ஜெபித்த தேவைகளுக்கு எதிரான, விசுவாசமற்ற வார்த் தைகளை அறிக்கையிடுகின்றார்கள். நீங்களோ அப்படியிராமல், விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருங்கள். உங்கள் சரீர குறைவுகளை மட்டுல்ல, உங்கள் ஆன்மீக பெலவீனங்களையும் பாராமுகமாக விட்டு விடாமல் அவைகளையும் ஆண்டவர் இயேசுவிடம் தெரியப் படுத்து ங்கள். இயேசுவே உம்முடைய அன்புக்காக நன்றி என்று அனுதினமும் அறிக்கையிடுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவருடைய நாமம் அன்று மட்டுமல்ல என்றென்றும் வல்ல மையுள்ளது. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமய த்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபா சனத்தண்டையிலே சேரக்கடவோம். வார்த்தையை அனுப்பி குணமா க்கும் தேவன், உங்கள் குறைவுகளை கிறிஸ்து இயேசுவுக்குள்; நிறை வாக்கி நடத்துவார்.

ஜெபம்:

சுகம் தரும் தேவனே, ஆண்டுகள் கடந்து சென்றாலும் நான் உம் மேல் கொண்டுள்ள விசுவாசத்திலே தளர்ந்து போய்விடாதபடிக்கு என் குறைவுகளிலே நீரே நிறைவாக இருந்து என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19