புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 20, 2021)

நீங்கள் ஆசீர்வாதத்தின் சுதந்திரர்கள்

1 பேதுரு 3:9

நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.


எனக்குத் துரோகம் செய்த அவன் நல்லா இருப்பானா? என்று ஒரு சகோதரன், தன் அயலிலிருக்கும் ஒரு மனிதனின் மேல் கசந்து கொண்டான். இவ்வாறாக, சிலவேளைகளிலே மற்றவர்கள் நமக்கு துன்பங்களை விளைவிக்கும் போது, நாமும் அறிந்தோ அறியாமலோ சாபமான வார்த்தைகளை கூறிவிடு கின்றோம். ஒருவரும் கெட்டுப் போகமல் நித்திய ஜீவனை அடை யும்படிக்கே ஆண்டவராகிய இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். (யோவான் 3:16) துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்க்கின்றவர்களும் அழிந்து போவது தேவனுடைய விருப்பம் அல்ல. அவர்கள் தங்கள் துன்மார்க் கத்தனத்திலிருந்து விடுதலையடைய வேண்டும் என்றே அவர் விரும்புகின்றார் (எசேக்கியா 18:21-23). ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3:9). பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்ன தென்று அறியாதிருக்கிறார்களே என்று தம்மை துன்புறுத்துகின்றவர்க ளுக்காக ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கும் போது வேண்டிக் கொண்டார். (லூக்கா 23:34). எனவே உங்களை காரணமின்றி துன்பப்ப டுத்துகின்றவர்களைக்கூட சபித்துவிடாதிருங்கள். யாவரும் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் சித்தமுள்ளவராயிருக்கின்றார். அவர்கள் தங் கள் அறியாமையிலே அழிந்து போகாதபடிக்கு, அவர்களை மன்னியு ங்கள். நீங்கள் மற்றவர்களை சபிக்கும் போது அவர்களைகுறித்த கசப்பு உங்கள் இருதயங்களில் ஒட்டிக் கொண்டு வளர ஆரம்பிக்கும். நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்க முள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர் வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்க ளென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்க ளைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவை யும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப் பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின் தொடரக்கடவன்.

ஜெபம்:

நித்திய ஆசீர்வாதத்திற்காக அழைத்த தேவனே, நான் மட்டுமல்ல யாவரும் அந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு கல்லான இருதயங்கள் உணர்வுடையும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:17