புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 19, 2021)

கிறிஸ்துவின் அடிச்சுவடுகள்

1 பேதுரு 2:21

நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.


ஏன் நீங்கள் இன்னுமொருவருடைய தப்பிதங்களை சகித்துக் கொள்ள கூடாதிருக்கின்றீர்கள்? எனக்கெதிராக குற்றம் செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்று அவர்களது முடிவைக் காணும்படி அதிகமாக பிரயாசப் படுகின்றீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் சாயலை அடையும்படி க்கு நீங்கள் அழைப்பைப் பெற்றவர்கள் என்பதை அறியாதிருக்கின்றீர் களா? நம்மை அழைத்த ஆண்டவர் இயேசுவின் அன்பை மறந்து போய் விட்டீர்களா? கபாலஸ்தலம் என்று அர்த் தங் கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, ஆண்டவர் இயேசுவை சிலுவையிலே அறைந்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இர ண்டு குற்றவாளிகளை அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். அந்த இரண்டு குற்றவாளி களும் தாங்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை பெற்றிருந் தார்கள். ஆண்டவர் இயேசுவோ, எந்தப் பாவமும் செய்யவில்லை, அவ ருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் மனிதகுலத் தின் பாவங்களுக்கான தண்டனையை தம்மேல் ஏற்றுக் கொண்டார். நம்முடைய பாவங்களுக்குரிய பரிகாரத்தை சிலுவையிலே செலுத் தினார். நாம் அந்தக் குற்றவாளிகளைப் போல பாவம் செய்து தண்ட னையை அனுபவிப்பதால் பலன் என்ன? அவர் பாவஞ்செய்யவில்லை. நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித் தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும் போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார். அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுப டும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிற பிதா வாகிய தேவனுக்கு தம்மை ஒப்புவித்தார். அதனாலே புதிதும் ஜீவனு மான பரலோக மார்க்கத்தை அவர் நமக்காக திறந்தார். நாமும் ஆண் டவர் இயேசுவின் சாயலிலே வளரும்படிக்கு பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்பபோம். நன்மை செய்து பாடனு பவிக்க நேரிட்டால் அதுவே மேன்மை என எண்ணிக் கொள்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோகப் பிதாவே, ஒவ்வொரு நாளும் நான் தேவ சாயலிலே வளரும்படிக்கு, கிறிஸ்துவில் இருந்த சிந்தை என்னில் வளரும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 6:5-11