புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 18, 2021)

அனுதின பயிற்சி

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்


ஒரு தேசத்தின் இராணுவ படையிலே சேர்ந்து சேவை செய்ய வேண் டும் என்ற நோக்கத்துடன், படையிலே இணைந்த இளைஞனொருவன், தன் பயிற்சியின் நாட்களை முடித்து உத்தியோகபூர்வமாக படையிலே சேர்க்கப்பட்டான். தனக்குரிய பயிற்சி முடிந்து விட்டதுதானே இனி சற்று இளைப்பாறலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் அடுத்த நாளிலி ருந்தே அவன் காலையிலே நேரத்தோடு எழுந்து, ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட பயிற்சிகளையும் வே லைகளையும் முடித்து, எப்போதும் உசார் நிலையிலே இருக்க வேண்டும் என்பதையும் அத்தோடு எந்நேரமும் உடற்பயிற்சி செய்து, சகல ஆயத்த த்துடனும் இருக்க வேண்டும் என் பதை அறிந்த போது அவன் மனச்சோர்வு அடைந்தான். பயிற்சி முடிந்து விட்டதுதானே, இனி ஒரு யுத்தம் வரும்வரை சும்மா இருப்போம் என்று படையில் சேவகம் பண்ண பதிந்து கொண்டவர்கள் இருக்க முடியுமா? பிரியமானவர்களே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்வும் இப்படியாகவே இருக்கின்றது. வேதாகம கல்லூரிக்குச் சென்று வேதத்தை கற்றுவிட்டேன் என்று ஒருவன் திருப்தியடைய முடியுமா? அல்லது பாவ அறிக்கை செய்தேன், ஞானஸ்நானத்திற்குக் கீழ்படிந்திருக்கின்றேன், தூய ஆவி யின் அபிN~கத்தை பெற்றிருக்கின்றேன் இனி இளைப்பாறலாம் என்று இருக்க முடியாது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு நினையாத நாளி கையிலே நம்மை கூட்டிச் செல்ல வருவார். எனவே நாம் மணவாளன் வருவார் என்று ஆயத்தமாக இருந்த புத்தியுள்ள கன்னிகைகளைப் போல, நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் வருக்கைக்காக எப் போதுமே ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் ஆயத் தத்தமாவதை குழப்பும்படிக்கு, உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். எனவே நாம் அனுதினமும் தேவனோடுள்ள உறவிலே வளரும்படிக்கு கருத்துதோடு வேத வார்த்தைகளை தியானித்து, ஊக் கத்தோடு ஜெபம் செய்கின்றவர்களாக இருக்க வேண்டும். நான் பல ஆண்டுகள் ஆண்டவர் இயேசுவை அறிந்திருக்கின்றேன், எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு ஒரு பயிற்சியும் தேவையில்லை என்று இருப்பது ஒரு பின்மாற்றமான வாழ்க்கை. எனவே, தேவனை அறிகின்ற அறிவிலே வளரும்படி ஒவ்வொரு எதிரடையான சூழ்நிலையிலும் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசானவனுக்கு எதிர்த்து நிற்கும்படி க்கு ஆயத்தமுள்ளவர்ளாக இருப்போம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்முடைய வார்த் தையைக் கேட்டு, அதன்படி நடப்பதையே என் வாழ்வின் கருப்பொருளாக கொண்டிருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:44