புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 17, 2021)

நல் நடக்கையின் சாட்சி

1 பேதுரு 2:15

நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.


சம உரிமை, மனித உரிமை என்று குரல் எழுப்பி இன்று மனிதர்கள் நாடுகளிலே பல சட்டங்களை அமுல்படுத்தியிருக்கின்றார்கள். சட்ட ரீதி யாக நான் சமமானவன். நாட்டின் சட்டப்படி யாரும் போதகராக வரு வதற்கு தடையில்லை. மனித உரிமையின்படி நான் யாரையும் திரு மணம் செய்து கொள்ளலாம். நாட்டின் சட்டப்படி நான் திருமணம் செய் யாமலும் வாழ்ந்து விடலாம் என்று மனி தர்கள் தங்கள் மனவிருப்பங்களையே சட்டங்களாக மாற்றுவதால், தங்கள் வாழ்க்கை நீதியுள்ளது என்று மனத்திரு ப்தியடைகின்றார்கள். சட்டப்படி ஒருவர் போதகராகலாம் ஆனால் அந்தப் போத கர் ஆண்டவர் இயேசுவின் அங்கீகார த்தை பெறாவிட்டால், அந்த போதகரு டைய ஆண்டவர் யார்? சட்டப்படி கண வன் என்னை கனப்படுத்த வேண்டும் அல்லது சட்டப்படி மனனைவி என்னை கனப்படுத்த வேண்டும் என்று உரிமை கோருவதால், கணவன் மனை விக்கிடையில் நல்லுறவு வளர்ந்து விடுமோ? சமாதானமான வாழ்வுக் குரிய வழியை தேவனுடைய வார்த்தை நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. வேலைக்காரர்களே நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ள எஜமான்களுக்கும் கீழ்ப்படிந்திரு ங்கள். அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புரு~ர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்;. வாலிபரே மூப்பர்களுக்கு கீழ்படிந்திருங்கள். ஜன ங்களே, மேலான அதிகாரங்களுக்கு கீழ்படிந்திருங்கள். சபையிலே மட்டுமல்ல, தேசத்திலே, வேலையிடங்களிலே, பாடசாலைகளிலே, வீட் டிலே நீங்கள் உங்கள் கீழ்படிவைக் காண்பிப்பதால் உங்கள் வாழ்க் கையில் நன்மையையும், உங்களை கடுமையாக நடுத்துகின்றவர்களின் வாழ்க்கையில் நல் மாற்றங்களையும் உண்டு பண்ணலாம். நாம் நம்மு டைய வாழ்க்கையிலே கீழ்படிவைக் காண்பிப்பதினால், மற்றவர்கள் செய்வதெல்லாம் சரி என்று பொருளல்ல. நாம் கீழ்படிவைக் காண்பி க்கும் போது, முதலாவதாக நாம் கர்த்தருடைய வார்த்தை நம்மில் நிறை வேற, நம்மைத் நாமே தாழ்த்துகின்றோம். அப்பொழுது தேவனு டைய சித்தம் நம் வாழ்விலே நிறைவேற இடங் கொடுக்கின்றோம். இதனால் எங்களை கடுமையாக நடுத்துகின்றவர்களும் எங்கள் நல் நடக் கையின் சாட்சியை ஒரு நாள் எடுத்துரைப்பார்கள். இப்படியாக பிதா வாகிய தேவனுடைய நாமம் எங்கள் வழியாக மகிமைப்படும்.

ஜெபம்:

மனத்தாழ்மையை கற்றுக் கொடுக்கும் தேவனே, கசப்பான அனுப வங்களை கடந்து செல்லும் போதும், நான் உம்முடைய வார்த்தை என்னில் நிறைவேறும்படி என்னைத் தாழ்த்த என்னை உணர்வுள்ளவ னா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 13:1-7