புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2021)

தாழ்மையும் கீழ்படிவும்

1 பேதுரு 2:18

வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்;


ஒரு ஸ்தாபனத்திலே சில ஆண்டுகளாக வேலை செய்து வந்த தொழி லாளியை, அந்த ஸ்தாபனத்தில் புதிதாக சேர்ந்த இயக்குனர் கடுமை யாக நடத்தி வந்தார். சில கிழமைகளுக்கு பின்னர், அந்தத் தொழிலாளி கோபமடைந்ததால் அந்த ஸ்தாபனத்தை விட்டு தான் விலகப் போகின்றேன் என்று தன்னுடன் வேலை பார்த்த ஒரு அனுபவ மிக்க சக தொழிலாளியிடம் கூறி னான். அதற்கு அந்த சக தொழி லாளி: நண்பனே, பிரச்சனைகள் வரும் போது அவைகளை விட்டு ஓடுவது மட்டுமே அதற்கு முடிவு அல்ல. ஒருவேளை அந்த இயக்கு னருக்கு உன்னை குறித்து தப்பான அபிப்பிரயாயம் இருக்கலாம். இன் னும் கொஞ்ச கால அவகாசத்தை அவருக்கு கொடுத்து, உன்னுடைய நிலைமையையும் ஆராய்ந்து பார். ஒரு வேளை நீ இதை மேற்கொ ண்டு விடுவாய். நீ இன்னுமொரு ஸ்தாபனத்திற்கு செல்லும் போது, அங்கே உனக்கு செங்கம்பள வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கின் றாயா? என்று அறிவுரை கூறினார். அந்த அறிவுரையை கேட்டு அந்தத் தொழிலாளி, தன் காரியங்களை ஆராய்ந்து தன் வேலை முறைமைக ளில் சில சிறிய மாற்றங்களை உண்டு பண்ணினான். ஆதைக் கண்டு கொண்ட இயக்குனர், அவனை அழைத்து அவனோடு பேசி, அவனை ஊக்குவித்தார். அவனுக்கும் இயக்குனருக்குமிடையில் நல் நம்பிக்கை வளர ஆரம்பித்தது. பிரியமானவர்களே, இன்றைய உலகிலே பல மனித ர்கள் அதிகதிகமாக தங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளின் முடிவை துரிதமாக எடுத்துக் கொள்கின்றார்கள். பாடசாலையில் ஆசிரியர் ஒருவ ரோடு பிரச்சனையாக இருந்தால், பாடசாலையை மாற்றி விடுவோம். வீட்டு சொந்தக்காரரோடு பிரச்சனையாக இருந்தால், இன்னுமொரு வீட்டை வாடகைக்கு எடுப்போம். மனைவியோடு பிரச்சனையென்றால் சிலர் திருமண ஒப்பந்தத்தை உடைத்து மறுமணம் செய்து விடுகின்றா ர்கள். சபையிலே பிரச்சனையென்றால் இன்னுமொரு சபைக்கு சென்று விடுவோம் என்று வாழ்ந்து வருகின்றார்கள். நாமோ, முதலாவதாக நம்முடைய வாழ்வை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நல்லுறவை வளர் ப்பதற்கு மனமாற்றம் அவசியமானது. கீழ்படிவும் தாழ்மையும் கடுமை யான மனங்களும் உருகிக் போய்விடும். மெதுவான பிரதியுத்தரம் உக்கிர த்தை மாற்றும்;. எனவே பிரச்சனைகள் தலைதூக்கும் போது உங்கள் வாழ்க்கையில் சிறிய மாறுதல்களைக் காண்பியுங்கள்.

ஜெபம்:

எல்லாவற்றையும் அறிந்த தேவனே, பிரச்சனைகளை விட்டு ஓடுவது மட்டுமே பிரச்சனைகளுக்குரிய ஒரே தீர்வு என்று எண்ணாமல், உம்முடைய வார்த்தையின்படி சூழ்நிலைகளை மேற்கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழி 15:1