புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2021)

மனப்பூர்வமாய் மன்னியுங்கள்

மத்தேயு 18:35

நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.


ஒரு ஊரிலே இருந்த ராஜாவிடம் அவனுடைய ஊழிக்காரர்களில் ஒரு வன், பதினாயிரம் தாலந்துகளை கடன்பட்டிருந்தான். அவன் தான் பட்ட கடனை தீர்க்க அவனுக்கு முடியாமற் போனதினால், அந்த ஊழிய க்காரன் தாழவிழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமை யாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனு டைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கட னையும் அவனுக்கு மன்னித்துவி ட்டான். அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகை யில், தன்னிடத்தில் நூறு வெள்ளி ப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவ னைக் கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிட த்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதி யாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவ னைக் காவலில் போடுவித்தான். அதை கேள்விப்பட்ட அந்த ஊரின் ராஜா அந்த நன்றியற்ற பொல்லாத ஊழியக்காரனை பிடித்து, நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங் கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடை ந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமள வும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். பிரியமான வர்களே, நாமும் பரலோகத்திற்கு பகைஞர்ளாகவும், நித்திய ஆக்கி னைக்கு பங்காளிகளாகவும் இருந்த வேளையிலே, ஆண்டவராகிய இயேசு தாமே நம்முடைய பாவங்களுக்குரிய பரிகாரத்தைத் தான் செலுத்தி, நம்மை நித்திய வாழ்விற்கு பங்காளிகளாக மாற்றினார். இப்படிப்பட்ட இரக்கத்தை நாம் பெற்றிருக்கும் போது, நம்முடைய உடன்சகோதரரில் ஒருவன் நமக்கெதிராக செய்யும் தப்பிதங்களை மன்னியாதிருந்தால், நாமும் அந்த நன்றியற்ற பொல்லாத ஊழியனைப் போல இருப்போம். எனவே, தேவனுக்கு உங்கள் நன்றியை தெரிவிக்கும்படிக்கு உங்க ளுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னித்து விடுங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள பிதாவே, உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் நீர் நம்மேல் எங்கள்மேல் காட்டிய இரக்கத்தை மற்றவர்களிடம் காட்டும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை எமக்கு தந்தருள்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 2:1-11

Category Tags: