புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2021)

மனதார நன்றியைத் தெரிவியுங்கள்

மத்தேயு 25:40

மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை என க்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.


ஒரு மனிதனானவனின் வாழ்க்கையிலே ஏற்பட்ட பெரிதான இக்கட்டான சூழ்நிலையிலே அவனுடைய அயலவனொருவன் தானாகவே முன் வந்து எந்த நிபந்தனையுமில்லாமல் உதவி செய்தான். அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் அந்த அயலவன் பெரும் ஆறுதலாக இருந் தான். உதவியைப் பெற்றவன் உடடினயான தன் அயலவனை சந்தித்து அவனுடைய உதாரத்துவத்தை பாராட்டி, அவன் தங்களுக்கு செய்த உதவியை தாங்கள் ஒரு போதும் மற ந்து போவதில்லை என்று அவனு க்கு வெளிப்படையாக நன்றியின் வார்த்தைகளை கூறினார்கள். பல ஆண்டுகள் கடந்து சென்றதும், அந்த மனிதனும் அந்தக் குடும்பத்தினரும் அந்த அயலவனுக்கு நன்றியாக இரு க்க வேண்டிய ஒரு சந்தரப்பம் ஏற் பட்டது. ஆனால் அந்த வேளையி லே அவர்கள் அந்த அயலவன் தங் களுக்கு செய்த உதவியை மறந்து போனானார்கள். பிரியமான சகோ தர சகோதரிகளே, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித ர்களிடம் நாம் நன்மைகளை பெற்றிருக்கின்றோம். பெற்ற மாத்திரத்திலே நன்றியின் வார்த்தைகளை கூறி, வாழ்;த்து மடல்களை அனுப்புவது நல் லது. ஆனால் உண்மையாகவே நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் அந்த நன்றியானது எனக்கு கடமையுண்டு, கடமையை தீர்க்க வேண்டும் என்று இருக்கக்கூடாது. மாறாக, குறித்த காலத்திலே நம்முடைய மனமார்ந்த செயல்களினாலே அந்த நன்றியானது காண் பிக்கப்பட வேண்டும். கண்கண்ட அயலவனுக்கு நன்றியறிதலுள்ளவனாக இருக்காதவன் எப்படி கண்காணாத தேவனுக்கு நன்றியறிதலுள்ளவ னாக இருப்பான்? “எனக்காக அடிக்கப்பட்டீர், எத்தனை நன்மைகள் என க்கு செய்தீர்? தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம், எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்” என்று அருமையான பாடல்களை பாடு கின்றோம். அந்த நன்றியானது நம்முடைய வாழ்வின் கிரியைகள் வழி யாக மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். பசியாக, தாக மாக, அந்நியராக, வஸ்திரமில்லாதவர்களாக, வியாதியாக, காவலிலிலே வைக்கப்பட்டவர்களாக இருக்கின்றவர்கள் பலர். அவர்களுக்கு எதை செய்கின்றீர்களோ, அதை நீங்கள் ஆண்டவர் இயேசுவுக்கே செய்கின்றீ ர்கள். அவ்வாறாக உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.

ஜெபம்:

எண்ணிலடங்காத நன்மைகளை என் ஆத்துமாவிற்குச் செய்த தேவனே, இந்த உலகிலே பல உபத்திரவங்களின் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மனதார உதவி செய்யும் உள்ளத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:15