புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2021)

உறுதியான ஐக்கியம்

1 யோவான் 1:3

எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.


இரண்டு மனிதர்கள் பங்காளிகளாக சேர்ந்து ஒரு வியாபார ஸ்தாபன மொன்றை ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் ஸ்தாபனத்திலே அனு தினமும் அதிக நேரத்தை ஒன்றாக செலவழித்து வந்ததார்கள். அதுமட்டு மல்லாமல், இருவரின் குடும்பங்களும் அவ்வப்போது ஒன்றுகூடல் களில் கலந்து கொண்டதால் ஒருவரோடொருவர் மிகவும் ஐக்கியப்பட்டி ருந்தார்கள். அவர்களுடைய ஸ்தாபன த்திலே வியாபாரம் நன்றாக வளர்ந்து வந்ததும், அந்தக் குடும்பங்களுக்கிடை யிலான உறவும் ஸ்திரப்பட்டிருந்தது. சில ஆண்டுகள் சென்றதும், அவர்க ளுடைய வியாபாரத்திலே சில பின்ன டைவுகள் ஏற்பட்டதால், பங்காளிகளு க்கிடையிலே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்கிடையிலான நல்லுறவு உடைந்து போய்விட்டது. மேற்கூறிய இந்த சம்பவத்திலே அவர்களுடைய ஐக்கியத்தின் மையப் பொருள் எது? அவர்களுடைய வியாபாரமே அவர்களின் ஐக்கியத்தின் காரணமாக இருந்தது. வியாபாரம் ஸ்தம்பி தமாகியதும் அவர்கள் ஐக்கியமும் அப்படியே களைந்து போய்விட்டது. இன்று சபை ஐக்கியங்களில்கூட மனிதர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாக இருப்பதற்கு தங்களுக்கிடையிலான பொதுவான விருப்பம் ஒன்றை தேடுகின்றார்கள் எடுத்துக்காட்டாக, “அவருக்கும் எனக்கும் உதைபந்தாட்டம் நல்லாக பிடிக்கும். இவர்களுக்கும் எங்களுக்கும் உல்லாசப் பயணங்கள் செல்வதில் விருப்பம் உண்டு. எங்களுக்கும் அவர்களுக்கும் இசையிலே ஆர்வம் உண்டு.” என்று அவைகளையே தங்கள் ஐக்கியத்தின் மையப் பொருளாக வைத்துக் கொள்வதால், அவைகளிலே மாற்றங்கள் உண்டாகும் போது, அவர்களின் ஐக்கியமும் மாறிப் போய்விடுகின்றது. நம்முடைய ஐக்கியம் இந்த உலக பொரு ளிலோ, உலகம் சார்ந்த நடவடிக்கைகளிலோ அல்லது மனிதர்களுடைய விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது. இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் அழிந்து போகும். எனவே நாம் அவைகளினாலே நிலையான ஐக்கியத்தை அடைய முடியாது. எங்கள் ஒவ்வொருவருடைய ஐக்கியமானது, பிதாவோடும் அவருடைய குமார னாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்க வேண்டும். அந்த ஐக்கிய மானது நிலையானது. அவரே நாம் ஒருவரோடொருவர் கொண்டுள்ள ஐக்கியத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும். தேவன் மாறாதவராக இருப்பதால் அந்த ஐக்கியமும் மாறிப் போகாது.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் மாறிப்போகும், மாறாத உம்மிலே நான் நிலைகொண்டர்களாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-5

Category Tags: