புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2021)

பக்திவிருத்திக்கு ஏதுவானவைகள்

எபேசியர் 4:29

பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.


தம்பி, நீ எப்போது பேசும் போதும் மற்றவர்களுடைய வாழ்க்கையிலு ள்ள குறைகளையே பேசுவதும், உன்னை சூழ நடக்கின்ற காரியங்க ளைக் குறித்து முறுமுறுக்கின்றவனுமாக இருக்கின்றாய். உன் கண்கள் எப்போதும் குறைவுகளிலே தரித்து நிற்கின்றதை காண்கின்றேன். இது உன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல. உன் வாழ்விலே நீ தேவனோடு கொண்டுள்ள உறவை நீயே சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு போதகர் ஒரு மனிதனுக்கு அறிவுரை கூறினார். ஒரு வேளை இப்படிப்பட்ட மனிதர் களை நீங்கள் உங்கள் வாழ்விலே சந்தித்திருக்கலாம். அவர்களைப் பற் றிய விமர்சனம் இன்றைய தியானத் திற்குரியதல்ல. ஆனால் நாம் நம்மு டைய வாழ்க்கையின் சம்பாஷைணை களை தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆகாத சம்பாஷைகள் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும். வம் பும் புத்தியீனமும் தகாதவைகள். குறைவுகள் இருக்கும் இடத்தில் நிய மிக்கப்பட்டவர்கள் தேவ ஆலோசனைகளை கூறுவது நல்லது. ஆனால் நாம்; மற்றவர்களுடன் பேசும் போது, நம்முடைய எல்லா சம்பாஷைணை களிலும் நாம் மற்றவர்களுடைய வாழ்க்கையிலுள்ள குறைவுகளைக் குறித்தே ஆராய்வதும், அவைகளை குறித்தே நொந்து கொள்கின்ற வர்களுமாக இருந்தால், நாம் ஆன்மீக நோய் கொண்டவர்களாக மாறி விடுவோம். நாம் கிறிஸ்துவை அறியுமுன்பு, பரலோக ராஜ்யத்திற்கு பகைஞர்களாக இருந்தோம். நமக்கும் பரலோகத்திற்கும் இடையில் பெரிதான பிளவு இருந்தது. மீட்பராகிய இயேசு, சமாதான காரணராகி, அந்தப் பிளவை நீக்கி, நம்மை பரலோகத்தோடு ஒப்புரவாக்கினார். அதன் வழியாய் தேவ சமாதானத்தை நாம் பெற்றுக் கொண்டடோம். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை அப்பா பிதாவே என்று கூப்பிடும் தகுதியை அடைந்தோம். நாம் தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஏற்படுத்தப்பட்டோம். நாம் தேவனுடைய குமாரர் களும் குமாரத்திகளுமாக இருந்தால், மற்றவர்களுடைய குறைகள் நம் முடைய வாழ்க்கையை ஆளுகை செய்யாதபடிக்கு தேவ சமாதானமே நம்மை ஆளுகை செய்ய வேண்டும். எனவே விசுவாசத்தினால் விளங் கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவானவற்றை பேசுங்கள். குறைகள் நிறைவாகும்படி சேர்ந்து ஜெபியுங்கள். சமாதனம் செய்யும் தேவ புத்திரராக இருங்கள்.

ஜெபம்:

தெய்வீக சமாதானத்தை எனக்குத் தந்த தேவனே, விசுவாச த்தினால் விளங்கும் பக்திவிருத்திக்கு ஏற்ற வைகளையே நான் கேட்கி ன்றவர்களுக்கு பிரயோஜனமுண்டாக பேசும்படி என்னை உணர்வுள்ள வனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - தீத்து 3:9

Category Tags: