புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2021)

வானத்திற்குரிய மேனியின் மகிமை

1 கொரிந்தியர் 15:40

வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;


தன் சின்ன வயதிலிருந்தே பல உபத்திரவங்கள், பொருளாதார நெரு க்கடிகள் மத்தியிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவனுக்கு, அபிவி ருத்தியடைந்த மேற்கத்தைய நாட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பு கிடை த்தது. அந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவன் அந்த செழிப்புள்ள தேசத்திற்கு சென்றான். சில ஆண்டுகளுக்கு பின்பு, அந்த தேசத்தின் குடியுரிமையை பெற்றுக் கொள்ளும்படிக்கான தகுதி அவனுக்கு கொடு க்கப்பட்டிருந்தது. அந்த உடன்படிக் கையின்படி அவன் தான் விட்டு வந்த தேசத்தின் குடியுரிமையை துறக்க வேண்டியதாக இருந்தது. அதாவது, செழிப்புள்ள தேசத்தின் உரிமைகள் யாவையும் பெற்றுக் கொள்ளும்படி க்காய் அவன்விட்டு வந்த தேசத்தின் உரிமைகளை அவன் விட்டுவிட வேண் டியதாக இருந்தது. அது போலவே நாம் பரலோக குடியுரிமையை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், இந்த பூமி நம்முடைய நிரந்தர குடியிருப்பு அல்ல என்பதை உணர்ந்து, இந்த உலத்தினால் உண்டாகும் நிரந்தரமற்றதான அதன் உரிமைகளை துறந்து விட வேண்டும். ஒரு வேளை இந்த உலகத்திலே பல நாடுக ளின் குடியுரிமையை பணம் கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் நாம் உலகத்தின் போக்கில் வாழ்ந்து கொண்டு, பரலோகத்தின் குடியுரி மையை எப்படிப்பட்ட உலக செல்வத்தினாலும் வாங்கிக் கொள்ள முடி யாது. பிரியமானவர்களே, உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத் தில் பிதாவின் அன்பில்லை. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக் குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே. பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையை விட்டுவிட மனதில்லாதவன், பரலோகத்தின் மேனிகளுடைய மகிமையைத் தரித்துக் கொள்ள முடியாது. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக் கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிரு க்கிறோம் (பிலிப்பியர் 3:20). ஆகவே, அழிவில்லாதவைகளை தரித்துக் கொள்ளும்படிக்கு அழிவிற்குரிய இந்த உலகத்தின் மேன்மைகளை விட் டுவிடுங்கள். இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வே~ந்தரியாமல், தேவனு டைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகு த்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

ஜெபம்:

பரலோக மகிமைக்காக அழைத்த தேவனே, மண்ணானவனுக்கு ரிய சாயலை களைந்து வானவருடைய மகிமையின் சாயலை நான் அடையும்படிக்கு நீர் என்னை அனுதினமும் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2