புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2021)

இருதயத்தை பராமரிப்போம்

மத்தேயு 13:8

சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.


ஒரு மனிதனானவன் தன் வீட்டின் பின்புறத்திலே இருக்கும் சிறிய தோட்டத்தை மிகவும் அழகாக பராமரித்து வந்தான். குறிப்பிட்ட ஆண்டு ஒன்றிலே அவன் வேறே அலுவலாக தூர பிரயாணமொன்றை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. பல நாட்களுக்கு பின் வீடு திரும்பிய அவன், தன் தோட்டத்திலே காஞ்சொறிகளும், முற்புதர்களும் முளைத்திருப்பதையும், அந்த களைகள் பெரிதாக முளைத்து அவன் தோட்டத்திலிருந்த அழகான பூமரங் களை மேற்கொண்டதையும் கண்டு, இவ்வளவு சீக்கிரமாய் இந்த தோட்டம் பாழாய் போய்விட்டதே என்று ஆச்ச ரியப்பட்டான். பிரியமானவர்களே, ஆதி யிலே ஆதாம் ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல்;, பிசாசினு டைய வார்த்தைக்கு கீழ்படிந்ததால் பூமியானது அவர்கள் நிமித்தம் சாபத் திற்குள்ளானது. அது இயற்கையா கவே “முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்” நிலமாக மாறிவிட்டது. அந்த நிலத்திலிருந்து பலன் பெற வேண்டுமாயின் அந்த நிலமானது பண்ப டுத்தி பராமரிக்கப்பட வேண்டும். பயிர் செய்வோம் என்று தீர்மானம் செய்த விவசாயியானவன், விதை விதைக்க முன்பு, நிலமானது அந்த விதையை முளைப்பிப்பதற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்த்து அதைப் பண்படுத்துவான். விதை விதைத்தபின்பு அவன் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை. பலனை காணும் நாள்வரைக்கும் அவன் தன் பயிர்களை பராமரித்து வருவான். அதுபோலவே இந்த உலகத்திலே வாழும் நாம், நம்முடைய இருதயமாகிய நிலத்தை பண்படுத்தி, பயனுள்ளதாக பராமரித்து வரவேண்டும். நம் இருதயத்தை தன்பாட்டிற்கே நாம் விட்டுவிடுவோமாக இருந்தால், நாம் ஆலயத்திற்கு சென்றாலும், தேவனுடைய வார்த்தையை கேட்டாலும், வேத வசன ங்களை கேட்டாலும், முற்களும் குருக்களுமாகிய உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் தேவ வசனத்தை நெருக்கிப்போடுகிற தினால், நம் வாழ்க்கையானது பலனற்றதாக மாறி விடும். இப்படிப்பட்ட வாழ்க்கையினாலேயே மனிதர்கள் தேவன் கொடுத்த மனச் சமாதா னத்தை உணர முடியாமல், நிம்மதியற்றவர்களாக அலைந்து திரிகின் றார்கள். தன் தோட்டத்தை கவனியாமற்போன அந்த மனிதனைப் போல நாம் கரிசனையற்றவர்களாக வாழாதபடிக்கு, நம் இருதயமாகிய நில த்தை தேவனுடைய வார்த்தையின்படி பண்படுத்தி, பராமரித்து காத்துக் கொள்வோமாக.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, என் வாழ்க்கையிலே நீர் கொடுத்திருக் கும் ஆசீர்வாதங்களை நான் காத்துக் கொள்ளும்படிக்கு எச்சரிக்கையுள்ளவனாக இருக்க நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 4:23