புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2021)

உங்கள் இலக்கை நோக்கி...

எபிரெயர் 12:3

தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்


நிஜமாகவே நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. இந்த விஷயத் திலே நான் முற்றிலும் நிரபராதி. என்னிடம் சாட்சிகள் உண்டு. இதற்கு இப்போது நீதி செய்யப்பட வேண்டும் என்று ஒரு மனிதனானவன் கூறிக் கொண்டான். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உங்கள் வாழ்வில் ஏற்பட்டி ருக்கலாம். இத்தகைய சூழ்நிலை, வீட்டிலோ, வசிக்கும் அயலிலோ, தொழிற்சாலையிலோ, பாடசாலையிலோ அல்லது சபையிலோ ஏற்ப டலாம். அந்த வேளைகளிலே, உண் மையிலே குற்றம் ஏதும் செய்யாத மனிதர்கள் “இப்போது நீதி நடப்பி க்கப்பட வேண்டும்” என்று பல குழப் பங்களை ஏற்படுத்தி விடுகின்றா ர்கள். ஆண்டவராகிய இயேசுவை கைது செய்த மதத்தலைவர்கள், பாவமறியாத பரிசுத்தரும், நன்மை யேயன்றி தீமை செய்யாதவருமா கிய ஆண்டவர் இயேசுவின்மேல் குற்றம்பிடிக்கும்படியாக வகை தேடினார்கள். எனவே பிரதான ஆசாரி யரும் மூப்பர்; சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். ஒருவரும் அகப் படவில்லை. அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை. அந்த வேளையிலும் ஆண்டவராகிய இயேசு மயிர் கத்திரிக்க கொண்டு செல்லும் செம்மறி ஆட்டைப் போல மௌனமாக இருந்தார். தம்மை அனுப்பிய தம்முடைய பரமபிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. தன்மேல் குற்றம் சுமத்துபவர்களுடைய பாவங்களையும் தன்மேல் ஏற்றுக் கொண்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, உங்களை அழைத்தவர் யார்? எதற்காக அழைத்தார்? உங்களுடைய இலக்கு என்ன? யாருடைய சித்தத்தை இந்தப் பூமியிலே நிறைவேற்றப் போகின்றீர்கள்? என்ற கேள்விகளை உங்கள் மனதிலே கேட்டுக் கொள்ளுங்கள். நீதியின் பாதையிலே வாழும் போது, எதிர்ப்பும் ஏளனங்களும் ஏற்படும். அவை உங்கள் வீட்டிலிருந்து கூட வரலாம். அதனால் உங்கள் பரலோக பிரயாணம் ஸ்தம்பிதமடையாதபடிக்கு அவைகளில் தரித்து நிற்காமல் உங்கள் பரம இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமா க்களில் சோர்ந்துபோகாதபடிக்கு ஆண்டவர் இயேசுவை நோக்கிப் பார்த்து அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்வுக்கென்று அழைத்த தேவனே, இந்த உலகத்தி னால் உண்டாகும் குழப்பங்களினால் நான் பெற்ற பரம அழைப்பின் இலக்கை மறந்து போய்விடாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5-6