புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 06, 2021)

மனதிலே யுத்தங்கள்

1 பேதுரு 5:10

சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி. ஸ்தி ரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;


ஒரு குறிப்பிட்ட தேசமொன்றிலே சில மாதங்களாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அந்த தேசத்திலே நாளாந்த நடடிவடிக்கைகள் ஸ்தம்பிதமாகிக் கொண்டிருந்தது. அந்த தேசத்திலே ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியினால் பல மக்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்குக்கூட மிகவும் க~;டப்பட்டார்கள். மாதங்கள் செல்லச் செல்ல, அந்த தேசத்திலே களவு, கொள்ளை, கொலை மற்றும் சமுதாய சீர்குலைவுகள் அதிகமாயி ற்று. மக்கள் தங்கள் நாளாந்த பிழை ப்பிற்காக எதையும் செய்துவி டலாம் என்ற மனநிலையுடையவர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். இவை யுத்தத்தினால் ஏற்படும் பக்கவிளை வுகளாக இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையிலும் போராட்டங்களும் யுத்தங்களும் ஏற்படுவதுண்டு. இவை களினால் மனிதர்க ளுடைய மனம் பெரும் குழப்பமடைந்து விடுகின்றது. வாழ்விலே நிம்மதி அற்றுப் போய்விடுகின்றது. இதனால் கொள்கை, கௌரவம் என்று வாழ்ந்தவர்கள்கூட நிலை தவறி தங்கள் புத்திக்கெட் டியபடி தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். மன குழப்பங்கள் மத்தியிலே எப்படி ஒரு மனிதனானவன் சிந்தித்து நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும்? இதனால் தேசத்திலே யுத்தத்தினால் உண்டான சீர்கு லைவுகளைப் போல, மனப்போராட்டங்கள் நிறைந்த மனிதனுடைய வாழ்விலும் பலவிதமான சீர்குலைவுகள் ஏற்பட்டு விடுகின்றது. இப்ப டிப்பட்ட சூழ் நிலைகள் மனிதர்களுடைய வாழ்விலே ஏற்படும் போது, பல தவறான காரியங்களை தங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இவர்கள் நுழைய விட்டுவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, இந்த உலகிலே வாழும் வரை நம்முடைய வாழ்விலே உப த்திரவங்களை நாம் தவிர்த்துக் கொள்ள முடியாது. மனிதர்களுடைய வாழ்விலே மனக் கவலைகளும் பாரங்களும் ஏற்பவதுண்டு. அப்படியாக ஏற்படும் நாளி லே உங்கள் வாழ்வில் நோவுகளை நீங்கள் அதிகரித்துக் கொள்வதற்கு முன்பாக சிலுவையண்டைக்கு திரும்புங்கள். ஆண்டவராகிய இயேசு உங்களை விசாரிக்கின்றவரானபடியால், உங்கள் உங்கள் கவலைகள், மனப்பாரங்கள், போராட்டங்கள் எல்லாவற்றையும்; அவர்மேல் வைத்து விடுங்கள். கிருபை நிறைந்த ஆண்டவர் இயேசு உங்களை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பலப்படுத்தி நடத்துவாராக.

ஜெபம்:

சகல கிருபையும் பொருந்திய தேவனே, வாழ்விலே ஏற்படும் உபத்திரவங்களை கண்டு பின்னிட்டு என் சொந்த தீர்மானங்களை எடுத்துக் கொள்ளாதபடிக்கு நீர் உம்முடைய வழியிலே என்னை நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:15