புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2021)

உடைத்து உருமாற்றும் தேவன்

ஏசாயா 64:8

இப்பொழுதும் கர்த்தா வே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக் குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.


ஒரு மனிதனானவனுடைய கையிலே ஒரு சிறிய நோவு ஏற்பட்டிருந்த படியினால், அவன் வைத்தியரை சந்திக்க சென்றிருந்தான். அவர் அவனுடைய கையை சற்று சோதனை செய்த பின்பு, இந்த நோவை கை மருந்துகளால் மாற்றிவிடலாம். அத்தோடு, உன் வேலை செய்யும் முறைகளை சற்று மாற்றிவிட வேண் டும் என்று கூறினார். வைத்தியர் கூறிய படி செய்து வந்த அந்த மனிதனான வன், ஒரு சில மாதங்களுக்கு பின்பு அதை பாராமுகமாக விட்டுவிட்டான். வருடங்கள் கடந்து சென்ற பின்பு, அவன் கையை அசைக்க முடியாதப டிக்கு அவனுக்கு நோவு ஏற்பட்டதால், அவன் துரிதமாக வைத்தியரை காணும் படி சென்றிருந்தான். அவனுடைய நிலையை ஆராய்ந்து பார்த்த வைத் தியர், அவனை நோக்கி: இதை இனி மருந்துகளாலும் பயிற்சிகளாலும் குணமாக்க முடியாது. எனவே, நீ சீக் கிரமாக சத்திர சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமாக கூறினார். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய ஆவிக் குரிய வாழ்க்கை யிலும் இதற்கொத்ததான சூழ்நிலைகள் ஏற்படுவது ண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு வாலிபனுடைய மனதிலே தன் வாழ்க்கை யை குறித்த பெருமை கொஞ்சம் குடிகொண்டிருந்தது. பலர் அதைக் குறித்து அவனிடம் அவ்வப்போது கூறிய போதும், அவன் பாராமு கமாக இருந்துவிட்டான். வருடங்கள் கடந்து சென்றதும், அந்த பெருமை யானது நோயைப் போல பரவி, அவன் மனக் கண்களை குருடுபடுத்தி விட்டது. அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்று பரிசுத்த வேதாகமம் கூறவதைப் போல, அவன் வாழ்விலே ஏற்பட்ட மிகப் பயங்கரமான விழுகையின் வழியாக அவன் தன் பெருமையை உணர்ந்து கொண்டான். அவன் தீமையின் வழியிலே நடந்த போதும், இரக்கமுள்ள தேவன், அவன் வாழ்வில் ஏற்பட்ட தீமை யை நன்மையாக மாற்றினார். எனவே, நம் வாழ்வில் ஏற்படும் மாம்ச த்தின் எண்ணங்களாகிய கோபம், வன்மம், கசப்பு, பகை, விரோதம், பிரிவினைகள் போன்றவற்றை ஆரம்பத்திலேயே மேற்கொண்டுவிடுவது நல்லது. அதை நாம் உணராது வாழும் போது, குயவன் கையில்களி மண்ணைப் போல, நம்முடைய கர்த்தர் நமது வாழ்வின் அனுபவங்கள் வழியாக நம்மை உடைத்து உருமாற்றுகின்றவராக இருக்கின்றார்.

ஜெபம்:

தெய்வீக சாயல் அடையும்படி அழைத்த தேவனே, என் வாழ் விலுள்ள மாம்சத்தின் கிரியைகளை ஆரம்பத்திலேயே விட்டுவிட ஞானத் தின் ஆவியை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 16:18