புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 04, 2021)

உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது

மத்தேயு 5:16

உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


நாம் ஆராதிக்கின்ற தேவன், அவர் இரக்கங்களின் பிதா, அவர் கிருபை என்றென்றுமுள்ளது. ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்த க்க தாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயர மாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிரு க்கிறது. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு தம் முடைய குமாரனை நமக்காக அனுப் பினார். இப்படியாக நம்மைக் காண்ப வரும், பரிசுத்தமுள்ளவரும், சத்திய முள்ளவரும், நம்மை எப்போதும் அன்பு செய்கின்றவருமான பிதாவாகிய தேவனின் குணாதியங்களை கூறி அவரை ஆராதிக்கின்றோம். அது மட்டுமல்லாமல், அவர் நம்மு டைய வாழ்வில் செய்த உபகாரங்களை எடுத்துரைத்து ஜனங்கள் மத்தி யிலே சாட்சி பகர்கின்றோம். நாம் தேவனை ஆராதிப்பதும், அவருடைய கிரியைகளை எடுத்துரைப்பதும் நமக்கு நன்மையும் அவசியமுமானது. அந்த நன்மையும், சாட்சியும் நம்முடைய வாழ்வின் கிரியைகள் வழி யாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பிரியமானவர்களே, சர்வ வல்லமை யுள்ள தேவனாகிய கர்த்தரை, அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண் ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் நாம் பெற்றிருக்கின்றோம். வான மும் பூமி யும் படைத்த பிதாவாகிய தேவனுக்கு நாம் பிள்ளைகளாக இருந்தால், அவருடைய தெய்வீக சுபாவங்கள் நம்முடைய வாழ்விலே வெளிப்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, மற்றவர்கள் எங்களு க்கு எதிராக செய்யும் குற்றங்களை நாம் பொறுத்து, நம்முடைய பிதா வைப் போல, இரக்கத்தில் செல்வந்தவர்களாக இருந்து, அவர்களை மன்னித்துவிட வேண்டும். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;. இந்த உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;. இயேசு கிறிஸ்துவின் முகத்தி லுள்ள தேவனுடைய மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண் ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். அந்த ஒளி யானது இந்த பாவ இருள் சூழ்ந்த உலகத்திலே மற்றய மனிதர்களுக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். இவ்விதமாய், மனு~ர் உங்கள் நற் கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமை ப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது. இவ்வண்ணமாக அவருடைய நாமம் நம் வாழ்க்கை வழியாக மகிமையும், சாட்சியும் அடைய வேண்டும்.

ஜெபம்:

நன்மைகளின் ஊற்றாகிய தேவனே, நீர் என்னுடைய பரம தகப்பன் என்பதை நம்முடைய வாழ்வின் நற்கிரியைகள் வழியாக நாம் வெளிப்படுத்தும்படிக்கு உணர்வுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6