புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 03, 2021)

உங்கள் தேவை என்ன?

மத்தேயு 6:8

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்க ளுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.


ஒரு பட்டணத்திலே வாழ்ந்து வந்த ஐசுவரியமுள்ள மனிதனுக்கு ஒரு மகன் இருந்தான். தன் மகனை அவன் அதிகமாக நேசித்து வந்ததால் அவனுக்கு தேவையான யாவற்றையும் குறித்த நேரத்திலே செய்து வந்தான். அவனுடைய மகனானவன், தன் வாலிப பருவத்தை அடைந்த தும், தன்னுடைய பிறந்த தின பரி சாக மோட்டார் சைக்கிள் (Motor Bike) ஒன்றை வாங்கி தரும்படி கேட்டுக் கொண்டான். பரவசம் நிறைந்த வாலிப பருவத்திலே, பட்டணத்து நெடுஞ்சாலைகளிலே தன் நண்பர்க ளோடு கூட்டமாக ஓடிச் செல்வது பெரும் ஆபத்தானது என்பதை தகப் பனானவர் அறிந்திருந்தார். மோட் டார் சைக்கிளை வாங்கி கொடுப்பது தகப்பனானவருக்கு ஒரு அற்பமான விஷயமாக இருந்த போதிலும், தன் மகனை அதிகமாக நேசித்ததால், அவன் அதை அவனுக்கு வாங்கி கொடுக்க மறுத்தார். அதனால், அந்த மகனானவன் மிகவும் கோபம் கொண்வனாய், “எனக்கு வேறு ஒரு பரிசுப் பொருளும் தேவையில்லை, என் பிறந்த நாளிற்கு விழாவும் தேவையில்லை” என்று தன் தகப்ப னானவரை நோக்கி கடுமையான வார்த்தைகளைக் கூறினான். காலங்கள் கடந்த சென்று அவன் பெரியவனாக போது, அவன் தகப்பனார், அவனை நோக்கி: நீ இப்போது அந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொள் என்று கூறினார். மகனானவன்: அப்பா, அது அப்போது என்னுடைய தேவை அல்ல என்று இப்போது நான் அறிந்து கொண்டேன். நான் பேசிய கடுமையான வார்த்தைகளை குறித்து மனம் வருந்துகின்றேன் என்று கூறினான். ஆம் பிரியமானவர்களே, நாமும் வளர்ந்தவர் களாக இருக்கின்ற போதிலும் அறியாத பருவங்கள் வாழ்விலே வருவதுண்டு. நம்மை நேசிக்கின்ற பரம பிதாவிடம் நாம் அநேக காரிங்களை கேட்கி ன்றோம். சில வேளைகளிலே, நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று பிடிவாதமுள்ளவர் களாக இருக்கின்றோம். ஏன் தேவன் என்னுடைய வேண்டுதல்களுக்கு பதில் தரவில்லை என்று அந்த வாலிபனைப் போல நம்முடைய பிதாவாகிய தேவனோடு நொந்து கொள்கின்றோம். ஆனால் காலங்கள் கட ந்து செல்லும் போது, நம்முடைய பரம பிதா எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் நம்மை நடத்திச் செல்கின்றார் என்பதை உணர்ந்து கொள்கின்றோம். பிரியமானவர்களே, உங்களுடைய தேவை இன்னதென்பதை அறிந்த தேவனிடம், அவருடைய சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேற இடங் கொடுங்கள்.

ஜெபம்:

காலங்களை அறிந்த தேவனே, என் வாழ்வின் தேவை என்ன என்பதை அறிந்து ஏற்ற நேரத்தில் யாவற்றையும் செய்து முடிக்கின்ற உம்முடைய வழிநடத்துதலுக்காக நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19