புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 02, 2021)

நீ விசுவாசித்தபடியே ஆகக்கடவது

மத்தேயு 8:13

நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார்.


ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தையின் வல்லமை கடந்த நாளோடு கடந்து போய்விட்டதா? இன்றைய சூழ்நிலைகள் உங்கள் மனதை மேற்கொண்டுவிடுகின்றதா? மனக் கவலைகள் உங்களை வாட்டுகின் றதா? உலகத்தில் உங்களுக்கு உபத் திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயி த்தேன் என்று கூறிய ஆண்டவர் இயேசு உங்களோடு என்றென்றை க்கும் இருக்கின்றார். ஒரு சமயம், ஆண்டவர் இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, ரோம பட்டாளத் தைச் சேர்ந்த நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடம் வந்தான். அவன் தேவனை அறியாத புறஜாதியனாக இருந்தான். அவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே! என் வேலை க்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்ப டுகிறான் என்று அவரை வேண்டிக் கொண்டான். அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்கு வேன் என்றார். நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்ப ட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். அதாவது, சொற்ப அதிகாரமுள்ள தன் வார்த்தைக்கு இவ்வளவு வல்லமையிருந்தால், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு எவ்வளவு வல்லமையுண்டு என்பதை தன் மனதிலே அவன் விசுவா சித்து, அவன் தன் வாயினாலே அறிக்கையிட்டான். நான் ஒரு பாவியா கிய மனு~ன், பரிசுத்தராகிய நீர் என்னுடைய வீட்டிற்கு வர நான் எம்மாத்திரம் என்று தன்னைத் தாழ்த்தினான். இயேசு அவனுடைய விசுவாசத்தை கண்டு ஆச்சரியப்பட்டார். பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு ஒருவரே மெய்த் தேவனும் அன்புள்ள தெய்வமுமாயிரு க்கின்றார். உங்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்த மீட்பரவர். இன்று நீங்கள் உங்கள் உள்ளத்தில் விசுவாசித்து, உங்கள் வாயினால் அறிக்கையிடுங்கள். உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகும்.

ஜெபம்:

என் நிலையை நன்றாக அறிந்த அன்புள்ள பிதாவே, மனதை வருத்தும் போராட்டங்களினால் நான் அழிழ்ந்து போய்விடாதாபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வல்லமையினால் என்னை உயிர்பித்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:8