புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 01, 2021)

உங்களுக்குச் சமாதானம்

மத்தேயு 28:18

ஆண்டவர் இயேசு சொன்னார்: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.


ஒரு தேசத்தை அரசாண்டு வந்த ராஜாவானவன், தன் தேசத்திலுள்ள குடிகளை பார்க்கும்படிக்கு ஒரு ஊருக்குள் போயிருந்தான். அங்கு அவன் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு ஏழை விதவையானவள் தன் குடு ம்பத்தின் நாளாந்த பிழைப்பிற்காக படும் பாடுகளையும், செங்கற்கள் சுடும் இடத்திலே பல மனிதர்கள் மத்தியிலே அவள் படும் பிரயாசத்தையும் கண்ட போது. அவன் அவளை அழைத்து, “இன் றோடு உன் கஷ்டங்கள் முடிந்து விட்டது, நீ வசிப்பதற்கு வீடும், நீயும் உன் பிள்ளைகளும் பிழைப்பதற்குரிய வசதிகள் யாவும் இன்று உனக்கு செய்யப்படும்” என்று கூறினான். அந்த ராஜாவின் வாக்கின்படி அவளுக்கு செய்யப்பட்டது. அந்த ராஜா சாதாரண மனிதனாக இருந்த போதும் அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படியே, அவன் உரைத்த வார்த்தைகள் நிறைவேறிற்று. மனிதனுடைய வார்த்தையின் வல்லமை அப்படியாக இருந்தால், வல்ல மையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தை யும் மகிமையையும் ஸ்தோத்திரத்தை யும் பெற்றுக்கொள்ளப் பாத்திரரா யிருக்கிறவரும், சகலத்தையும் ஆளும் ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் வல்லமையை சிந்தித்துப் பாருங்கள். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். மரணத்தை வென்று பாதா ளத்தை ஜெயங் கொண்ட ஆண்டவராகிய இயேசு, தம் சீஷர் முன்னி லையிலே வந்து “உங்களுக்குச் சமாதானம்” என்றார். அவர் விருதா வாய் பேசுவதில்லை. ஜீவனுள்ள அவருடைய வார்த்தையின்படியே அன்று அவருடைய சீஷர்களை ஆட்கொண்ட தேவ சமாதானமானது, இன்று எங்களுக்குரியதாக இருக்கின்றது. ஒரு வேளை அதிகாரத்திலுள்ள மனிதர்கள், அழிந்து போகும் இந்த உலக ஐசுவரியங்களை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் தங்கள் அதிகாரத்திற்குட்பட்டவைகளை செய்ய முடியும், ஆனால் எந்த மனிதனாலும் மனச்சமாதானத்தை கொடு க்க முடியாது. நித்திய சமாதானத்தை கொடுக்கும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை விசுவாசியுங்கள். அவருடைய வாக்குத்தத்தங் களை அனுதினமும் அறிக்கையிடுங்கள். பரிசுத்த வேதாகமத்திலுள்ள அந்த வல்லமையுள்ள வார்த்தைகள் உங்கள் வாழக்கையில் கிரியை செய்ய இடங்கொடுங்கள். தேச சமாதானம் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் ஆட்கொள்ளக் கடவதாக.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, என்னுடைய வாழ்க்கையை குழப்பும் சூழ்நிலைகளைவிட உம்முடைய வாரத்தையானது மிகவும் வல்லமையுள்ளது. அதன்படி உம்முடைய சமாதானம் என மனதை ஆட்கொள்வதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:15-16

Category Tags: