புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2021)

சுயமாய்ப் பேசுவதில்லை

யோவான் 12:49

நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.


இயேசு கிறிஸ்துவானர், அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். அவருக்குள் சகலமும் சிரு~;டிக் கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமா கிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்து க்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்த னங்களானாலும், அதிகாரங்களானா லும், சகலமும் அவரைக்கொண்டும் அவ ருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. சர்வ வல்லவராகிய அவர், தம்மைத் தாழ்த்தி இந்த உலகத்திற்கு வந்தார். காலம் நிறைவேறினபோது, பிதா தமக்கு நிய மித்த திருப்பணியை பிரதியட்சமாய் ஆரம்பித்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியான வர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். கிருபையி னாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வராய், மனிதர்கள் மத்தியிலே வாசம்பண்ணினார்;. நன்மை செய் கின்றவராய் சுற்றிதிரிந்தார். அவர் பேசும் போதும், உபதேசிக்கும் போதும், தம்சுயமாய் பேசாமல், பிதா பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் கட்டளையிட்டபடியே பேசி னார். அவர் தம்மைப் பலியாக ஒப்புக் கொடுக்கும் நேரம் வந்தபோது, அதிகாரிகள் முன்பும், அரசர்கள் முன்பும், போர்வீர்கள் முன்பும் மௌ மாக இருந்தார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனா லும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண் டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். பிதாவாகிய தேவனுடைய சித்தம் தம்மில் நிறைவேறும்படிக்கே மௌனமாக இருந்தார். பிரியமானவர்களே, அவரிடம் இருந்த தேவ ஆவியையே நாமும் பெற்றிருக்கி ன்றோம். எனவே நாமும் அதிகாரிகள் முன்னிலையில் நின்றாலும், மக்கள் முன்னிலையில் நின்றாலும், அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், தள்ளிவிடப்பட்டாலும், நாமும் நம் ஆண்டவராகிய இயேசு வைப்போல, பேசினாலும், மொளமாக இருந்தாலும் பிதாவின் சித்தம் நம்மில் நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்ய வேண்டும்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு வைப் போல நானும் தாழ்மையுள்ளவனாக உம்முடைய திருச்சித்தத்தை இந்தப் பூமியிலே நிறைவேற்றி முடிக்க பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 3:6-11

Category Tags: