தியானம் (ஆனி 29, 2021)
புத்திர சுவிகாரத்தின் ஆவி
ரோமர் 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
பவுல் என்னும் தேவ ஊழியர் ஆண்டவர் இயேசுவை சந்திப்பதற்கு முன்பு, அவர் மிகவும் மத வைராக்கியமுள்ளவராக இருந்தார். அவரிடம் இருந்த பெலன் என்ன? அவர்: இஸ்ரவேல் வம்சத்தை சேர்ந்தவர், பென்யமீன் கோத்திரத்தார், எபிரெயரில் பிறந்த எபிரெயர், சட்டதிட்டங்களின்படி பரிசேயனும் குற்றம் சாட்டபடாதவர், ரோம குடியுரிமைக் கொண்டவர், காமலியேல் என்னும் பிரபல்யமானரிடத்தில் கற்றவர். இந்த மாம்சத்தின் பெலத்தின்படி அவர் செயற்பட்டதால், அதனால் உண்டான பலன் என்ன? 1. ஸ்தேவன் என்னும் வாலிபனை யூதர்கள் கல்லெறிந்து கொல்லும் போது, பவுலும் அதற்கு உடந்தையாக இருந்தார். (அப் 22:20) 2. தேவனுடைய சபையை பாழாக்கிக் கொண்டிருந்தார். (அப் 8:3) ஆம் பிரி யமானவர்களே, நாமும் நமுக்குண்டான மாம்ச பெலத்தின்படி செயற்பட்டால், அதன் விளைவுகள் அவ்வண்ணமாகவே இருக்கும். ஆண் டவர் இயேசுவின் வழியில் நடப்போரை நாம் துன்பப்படுத்துகின்றவர்களாகவும், தேவனுடைய சபையை பாழாக்கின்றவர்களாகவும் இருப் போம். ஆனால், ஒரு நாள் பவுல் ஆண்டவர் இயேசுவை சந்தித்த போது, உன்னதத்திலிருந்து வந்த பெலத்தினால் தரிப்பிக்கப்பட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை உலகத்திற்கு அறிவிக்கும் பாதையிலே, அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டு, அநேகந்தரம் மரண அவதி யில் அகப்பட்டார். வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தார். இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று நன்கு அறிந்த அவர், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக இந்த உலகத்தினால் தனக்குண்டான மேன்மைகளை நஷ்டமென்றும் குப்பையென்றும் எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று அறிக்கையிட்டார். பிரியமானவர்ளே, நாம் இந்த உலகத்தின் தகைமையின்படி நடப்பதற்கு அடிமைத்தனத்தின் ஆவியை உடையவர்கள் அல்ல. அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத் தின் ஆவியைப் பெற்றிருக்கின்றோம். எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள்.
ஜெபம்:
பரலோகப் பிதாவே, மாம்சத்தின் படி வாழ்ந்து நித்திய மரணத்தி ற்குள் பிரவேசிக்காமல், உம்முடைய திருச்சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்றி நித்திய மகிமையில் பிரவேசிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 11:23-27