புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2021)

தேவன் தரும் பெலன்

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்ற வைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


ஆண்டவராகிய இயேசு தம்மை பலியாக ஒப்புக்கொடுத்த அன்று இரா த்திரியிலே, அவரை பிடித்துக் கொள்ளும்படிக்கு போர்ச்சேவகரின் கூட் டமும், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்களும்; பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தா ர்கள். அப்பொழுது இயேசுவின் சீஷனாகிய சீமோன் பேதுரு, தன்னி டத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிர தான ஆசாரியனுடைய வேலைக்கா ரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது, இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டய த்தால் மடிந்து போவார்கள் என்றார். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள், அத்தனை கூட்டத்திற்கு முன் பும், அப்படிப்பட்ட துணிகரமான செயலை செய்வதற்கு பேதுருவுக்கு பெலன் இருந்தது. இது இந்த உலகத்திற்குரிய சுயபெலன். இது அவனுடைய மாம்சபெலன். ஆண்டவர் இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு, பரலோகத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு, என் பிதா வாக்குத்த த்தம்பண்ணின பரிசுத்தஆவியை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகி றேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்ப டுவீர்கள் என்று உரைத்தார்;. ஆண்டவர் இயேசு உரைத்தபடி அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று பெலனடைந்தார்கள். அந்த தெய்வீக ஆவி க்குரிய பெலனை அவர்கள் அடைந்த போது, அவர்களின்; மாம்சபெலன் அகற்றப்பட்டது. உன்னதத்திலிருந்து உண்டான பெலத்தினால், அவர் கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷித்திற்காக பாடுகளையும் நிந்தை களையும் அனுபவிப்பதை பாக்கியம் என்று எண்ணினார்கள். நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்னையானது என அறிந்து கொண்டார்கள். அந்த உன்னத பெலத்தினால், இயேசுவின் சுவிசேஷித்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்யவும் ஆயத்தமாயிருந்தார்கள். ஆம் பிரியமானவர்களே, அவர்கள் பெற்ற உன்னதத்திலிருந்து தரிக்கப்பட்ட தேவ ஆவியை நமக்கும் பரம பிதா ஈவாக கொடுத்திருக்கின்றார். எனவே மாம்ச பெலத்தின்படி போராடாமல், தேவன் தரும் திவ்விய பெலத்தினால், நீடிய பொறுமையுள்ளவர்களாக இருந்து சோதனை களை ஜெயம் கொள்வோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நீர் தரும் உன்னத பெலத்தினால், என் வாழ்க்கையில் நான் எதிர்நோக்கும் போராட்டங்களை ஜெயிக்கத்தக்கதாக பொறுமையுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 24:49